Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Jan 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24804

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள சோளக்காட்டில் பழங்காலத்தில் சாலை அமைத்ததை நினைவு கூரும் விதமாக அரசு நினைவுத்தூண் அமைத்துள்ளது. அந்த நினைவு தூணில் அந்த பகுதியினர் சுவரொட்டிகளை (போஸ்டர்) ஒட்டி உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் இதனை காணமுடியாமல் போகிறது. எனவே இதன் மீது போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24802

மினிபஸ் சேவை மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மினிபஸ் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மீண்டும் மினி பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சண்முகம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24776

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா நெக்குந்தியில் இருந்து புதுப்பட்டி கிராமம் வரை உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில நேரங்களில் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24775

எரியாத உயர்கோபுர மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் வெள்ளக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டமேடு சந்திப்பு சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு மற்றும் கட்டமேடு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையில் இருபுறமும் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளன. அவை சரியாக ஒளிராததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24774

எரியாத உயர்கோபுர மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரின் மைய பகுதியில் அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சில நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை வெளியில் வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகன ஓட்டிகளும் சில நேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.-காந்தி, சி.எம்.புதூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24773

பொதுமக்களுக்கு இடையூறு

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 100-கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் மது குடிக்கிறார்கள். மேலும் இரவில் மதுபோதையில் அட்டகாசம் செய்வதுடன், பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆனந்தன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24772

சாலையில் பள்ளம்

சாலை

ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி. சர்ச் பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே சாலையின் நடுவே நீண்ட நாட்களாக மிகப் பெரிய பள்ளம் உள்ளது. இந்த வழியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்லும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சிவலிங்கம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24771

குடிநீர் தொட்டியை சீரமைக்கலாமே!

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் படப்பள்ளி ஊராட்சி வீரப்பன் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, போர்வெல்லை ஆழப்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-அண்ணாமலை, வீரப்பன் நகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24770

சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் ஊராட்சி ஆண்டியூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்பட்டது. தற்போது முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த சுகாதார வளாகத்தை புதுபித்து, புதர்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செண்பகராஜன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 4:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24769

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரவி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24590

சாக்கடை கால்வாய் மூடப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பாலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி செல்லும் சாலையில் கீழ் பாலப்பட்டியில் குறுகலான சாலையில் சாக்கடை செல்கின்றது. மின் கம்பத்தைெயாட்டி சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒரு சிறிய வளைவு உள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபுமணி, பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 5:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24589

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் உள்ள பாலப்பாளையம், தோனமேடு, குருக்கபுரம் போன்ற இடங்களில் பஸ் நிறுத்தம் இருந்தும் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ராசிபுரம் போன்ற ஊர்களில் இருந்து திருச்செங்கோடு, ஈரோடு, கோவை ஆகிய வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த ஊர்களில் அரசு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick