Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Jan 2023 3:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24974

திறக்கப்படாத இலவச கழிப்பிடம்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இலவச கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை திறக்காததால் ஊத்தங்கரையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி இலவச கழிப்பிடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சிவானந்தம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 3:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24973

சாலையில் நடுவே பள்ளம்

சாலையில் நடுவே பள்ளம்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காந்திபுரம் கிராமத்தில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதுபற்றி பலமுறை ஊராட்சி தலைவரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் முன் வரவேண்டும்.-அனிஷ், காந்திபுரம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 3:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24972

மின்கம்பத்தால் விபத்து

மின்கம்பத்தால் விபத்துமின்சாரம்

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மோப்பிரிப்பட்டி கிராமத்தில் ஜஸ்வர்யா கார்டன் தெருவின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். அந்த மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரமாக அமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள சுமார் 32 மின் கம்பங்களுக்கு தெரு விளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழந்து காணப்படுகிறது. இது பற்றி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சசி காதர், செக்காம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 3:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24971

பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மோட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு, பெத்தானூர், மோட்டாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க நத்தமேட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியோர், குழந்தைகள் என பலரும் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 3:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24970

ஆக்கிரமிக்கப்பட்ட மின்கம்பம்

ஆக்கிரமிக்கப்பட்ட மின்கம்பம்மற்றவை

தா்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி அவ்வைவழி சந்திப்பு சாலை பகுதியில் உள்ள மின்கம்பத்தை சுற்றி, இரும்பு தகடுகள் மூலம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடை வைத்துள்ளவருக்கும், கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கும் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை ஆக்கிரமிப்பு செய்து இரும்பு தகரங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பாலா, எ,ஜெட்டிஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 3:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24966

திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி மையப் பகுதியில் கழிவுநீர் கால்வாயின் சிமெண்டு சிலாப்புகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் திறந்த வெளியில் உள்ள கழிவுநீர் கால்வாயால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் இந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஞானவேல், சிக்க மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24811

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா ந.பள்ளக்காடு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு போதுமான எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கிராமத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரவீன், கெங்கவல்லி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24810

மதுபிரியர்களால் மாணவர்கள் அச்சம்

மற்றவை

சேலம் ஏற்காடு அடிவாரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தனியார் பள்ளி செல்லும் சாலையில் உள்ள மண் திட்டுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். இப்பகுதியில் 3 பள்ளிகளும், ஒரு கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. மதுபிரியர்களால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து சென்று மதுபிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆனந்த், ஏற்காடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#24809

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் தேவி தியேட்டர் அருகில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி உள்ளன. இதனால் இங்குள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சாகுல் அமீத் கான், லைன்மேடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#24807

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

சேலம் கோரிமேடு அரசு மகளிர் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. கல்லூரி மாணவிகள் அவசரமாக ஓடி சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. இதனால் மாணவிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24806

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் குறுக்கபுரம் உள்ளது. இங்குள்ள தனியார் நூற்பாலையில் இருந்து குருசாமி பாளையம் செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணியன், குருசாமிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24805

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி செல்லும் வழியில் பன்னீர்குத்திபாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில், மழை காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி பன்னீர்குத்திபாளையம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.-ப.குமார், திருச்செங்கோடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick