Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jan 2023 4:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25209

குடிநீர் எந்திரம் பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொது மக்களின் பயன்பாட்டிற்காக பஸ் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் எந்திரம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் எந்திரத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-வெங்கடேசன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25208

தண்ணீர் குழாய் சீரமக்கப்படுமா?

தண்ணீர்

ஓசூர் மஞ்சுசிரி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நடைபயிற்சி செய்பவர்களுக்கு நடைபாதை உள்ளது. பூங்காவில் உள்ள தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி நடைபாதை முழுவதும் பரவி பாசி படர்ந்து நடைபயிற்சி செய்பவர்களுக்கும், பூங்காவுக்கு விளையாடவரும் சிறுவர்களுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-சுப்பிரமணியன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25207

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மீண்டும் மூடப்படாமல் உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோவர்தன், கிருஷண்கிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24997

சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சவுதாபுரம் பகுதியில் இருந்து தொட்டிபட்டி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-சமித்ரா, தொட்டிபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24996

அதிவேகம் ஆபத்து

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலாவாக வரும் சில வெளிமாநில வாலிபர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அவ்வாறு வரும்போது சேந்தமங்கலம் பகுதியில் இருந்து அடிவாரப் பகுதியான காரவள்ளி வரை வேகமாக சென்று வருகின்றனர். இதனால் அவ்வழியே மற்ற வாகனங்களில் செல்வோர் சற்று அச்சத்துடனே செல்கின்றனர். எனவே வேகத்தை கட்டுப்படுத்தி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வரும் வெளிமாநில வாலிபர்கள் நிதானமாக செல்ல அறிவுறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்துரு ,சேந்தமங்கலம்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#24995

சாலையோரம் குழி

சாலை

மோகனூர் அருகே மாடகாசம்பட்டி ஊராட்சியில் இருந்து தோளூர் செல்லும் சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட ஒரு குழி தார் சாலையை ஒட்டியவாறு உள்ளது. தற்போது மழை பெய்ததால் புற்கள், செடிகள் முளைத்துள்ளதால் ரோட்டில் செல்பவர்களுக்கு குழியிருப்பது தெரியவதில்லை. நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் குழியை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ் கண்ணன், கே.புதுப்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24994

திறக்கப்படாத கழிப்பிடம்

திறக்கப்படாத கழிப்பிடம்மற்றவை

சேலம் ஊராட்சி ஒன்றியம் வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்களுக்காக பொது சுகாதார கழிப்பிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மேலும் இந்த சுகாதார வளாகம் வேலை முடிவு பெறாமல் இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முடிக்கப்பட்டது. ஆனாலும் இந்த பொது சுகாதார கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்னும் திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24993

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கோவிலுக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்து, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24992

மீண்டும் மினிபஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் இரும்பாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து மினிபஸ் ஒன்று கீரபாப்பாம்பாடி, கருக்கல்வாடி, தோப்பூர், கோணகப்பாடி, பொத்தனூர் ஆகிய வழித்தடத்தில் தாரமங்கலம் பஸ் நிலையம் வரை சென்று கொண்டு இருந்தது. இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது சில ஆண்டுகளாக அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அந்த மினி பஸ் இயக்க சம்பந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வம், கீரபாப்பாம்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24991

தெருநாய்களால் அச்சம்

மற்றவை

சேலம் மெய்யனூர் புதுதெரு 18-வது வார்டு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்களால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்களும் மற்றும் பெண்களும் அந்த பகுதிகளில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.-ரமேஷ், மெய்யனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 3:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24976

மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

ஓசூரில் நீதிமன்றங்கள், தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையங்கள்,, தனிபட்டா வழங்கும் வருவாய் அலுவலகம் ஆகியவை ஒருங்கிணைந்துள்ள இந்த வளாகத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் இரவில் மகளிர் போலீஸ் நிலையம் வர பயப்படுகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள இந்த இடத்தில் தெருவிளக்கு அல்லது உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.-ராஜேந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 3:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24975

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட ரகமத்காலனி தர்மபுரி மெயின்ரோட்டில் இருந்து பிள்ளையார்கோவில் வழியாக எல்லப்பன் வீடு வரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை முழுவதும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாக பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.-புருசப்பன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick