Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jan 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25226

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

பாலப்பட்டி அருகில் உள்ள கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல் செல்லும் ஆட்டோ நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் செல்கிறது. அதில் மேலும் புதியதாக குழாய் அமைக்கும் பணி கே.புதுப்பாளையத்தில் உள்ள பம்பிங் அறை வரை நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ்குமார், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25224

உழவர் சந்தை அமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மெட்டாலா தற்போது காய்கறி விற்பனையில் முக்கிய இடமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் மெட்டாலா, கார்கூடல்பட்டி, உரம்பு, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, மூலக்குறிச்சி, நடுக்கோம்பை, திம்மநாயக்கன்பட்டி, ஈஸ்வரமூர்த்திபாளையம் உள்பட பல கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்து மெட்டாலாவில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டால் விவசாயிகளும், நுகர்வோரும் பயன் அடைவர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உழவர்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25222

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் கழிவுநீர் வாய்க்காலில் அப்பகுதியில் சென்று வருவோர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரேசன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#25220

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் வாழப்பாடி புறவழி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கமல்ராஜா, வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#25218

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் தளவாய்ப்பட்டி பகுதியில் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்ப்பட்டி ஹவுஸிங் போர்டு வாய்க்கால் உள்ளது. சர்க்கார் கொல்லப்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழை தண்ணீர் இந்த வாய்க்கால் வழியாக சென்று அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு பயன் அளிக்கிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மழை தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இந்த வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மணிகண்டன், வட்ட முத்தாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#25217

பன்றிகள் தொல்லை

மற்றவை

சேலம் கந்தம்பட்டியில் கடந்த சில நாட்களாக பன்றிகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. பன்றிகள் சாக்கடையில் விழுந்து செல்வதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் கூட்டமாக திரிவதால் வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பன்றிகளை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திருப்பதி, கந்தம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#25216

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா செல்லபிள்ளைகோட்டையில் தாலுகா அலுவலகம் செல்லும் மண் சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமாக உள்ளது. அந்த வழியில் பள்ளி வாகனங்கள் அதிகமாக செல்வதால் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-தனசேகர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25215

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக கடத்தூருக்கு வர வேண்டும். இங்கு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கயைும் எடுக்கப்படவில்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஜயகுமார், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25213

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி- பேகாரஅள்ளி சாலையில் மோதுகுலஅள்ளி பிரிவு ரோட்டில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் செல்லும் போது ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முனுசாமி, மோதுகுலஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25212

ஆபத்தான மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சுண்டகாப்பட்டி முருகர் கோவில் அருகே உயர் கோபுர மின்விளக்கு சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும்படி தொங்கிய நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின் விளக்கை சீரமைக்க வேண்டும்.-ஆனந்தன், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25211

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இந்த பகுதியில் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த வழியே செல்லும் செல்லும் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இந்த சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?-நல்லதம்பி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25210

தபால் பெட்டி வைக்க கோரிக்கை

ட்ரெண்டிங்

பர்கூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தபால் நிலையம் உள்ளது. தபால் போடுபவர்கள் அங்கு சென்று தான் பெட்டியில் போட வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் தபால் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. சில ஆண்டுகளாக தபால் பெட்டிகள் எங்கும் வைப்பதில்லை. அரசு அலுவலக தபால்களை கூட தனியார் கூரியர் சர்வீஸில் அனுப்பி வருகின்றனர். இதையும் அரசு தபால் நிலையங்கள் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே பர்கூர் பேரூராட்சி 15 வார்டுகளிலும் கிராமப்புறங்களிலும் தபால் பெட்டிகள் வைக்க சமந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick