Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Jan 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#25440

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

சேலம் மாவட்டம் மேட்டூர், தூக்கனாம்பட்டி , சின்ன பார்க் , பெரிய பார்க் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்களால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும். -தேவா, மேட்டூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | ஏற்காடு
#25439

சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்பூங்கா

சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் லேடீஸ் சீட் என்ற பகுதி சுற்று சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அதன் அருகே சென்று செல்பி எடுக்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சுற்று சுவர் கட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.-முகமது, ஏற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#25438

சிக்னல் அவசியம்

போக்குவரத்து

சேலம் புதிய பஸ் நிலையம் ஒரு புறத்தில் இருந்து எதிர்புறம் பழைய பஸ் நிலையம் செல்ல பஸ் ஏற சாலையை கடப்பதற்கு பொது மக்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். எதிர்பாராத நேரங்களில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிக்னல் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜான், குப்தா நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25431

விபத்து ஏற்படும் அபாயம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து திருப்பத்தூர் மெயின் ரோட்டில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகில் நெடுஞ்சாலையோரம் மண் திட்டுகள் உள்ளன. இதனால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன. மேலும் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் மண் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25430

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் மாநகராட்சி 22-வது வார்டு நியூ அன்னை நகரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் முதியோர்கள் நடந்து செல்லும்போது தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சரஸ்வதி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25429

சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலையில் சீனிவாச மகால் அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையை தோண்டி குழாய் உடைப்பை அதிகாரிகள் சீரமைத்தனர். ஆனால் உடைப்பு சரியாக சீரமைக்காத காரணத்தால் தண்ணீர் தற்போதும் சாலையில் வழிந்தோடுகிறது. அத்துடன் சாலை தோண்டிய இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25428

எலும்புகூடான மின்கம்பம்

எலும்புகூடான மின்கம்பம்மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி ஊராட்சி தேசு பள்ளி ராகவன் கொட்டாய் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சிமெண்டு சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்து சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது. அந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சிகள் விழுந்து இரும்பு கம்பிகள் தெரிந்தபடி எலும்புகூடுபோல் தெரிகின்றன. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.-பாலா, ராகவன்கொட்டாய், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25419

திறக்கப்படாத சுகாதார வளாகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி இருசன்கொட்டாய் கிராமத்தில் சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே இந்த சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மூர்த்தி, இருசன்கொட்டாய், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25413

சாலையோரம் குப்பைகளை கொட்டலாமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். காற்று அதிகம் வீசும் போது குப்பைகள் சாலை முழுவதும் பரவுகின்றன. அதனால் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சாலை ஓரங்களில் குப்பைத்தொட்டி அமைத்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவிசங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25412

சுகாதார கேடு

சுகாதார கேடுகுப்பை

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மெயின் கேட் அருகில் பள்ளி எதிரில் உள்ள கடைக்காரர்கள் குடியிருப்போர் குப்பைகளையும், பழைய துணிகளையும் கொட்டிவைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி சுகாதாரமற்று காணப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பேரூராட்சி குப்பைகளை அகற்றினாலும் பலமுறை சொல்லியும் மீண்டும் அதே இடத்தில் கொட்டுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பத்மநாபன், அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25410

புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?

புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் மற்றும் தொட்டியின் மேற்புறம் பழுதடைந்து விரிசல் காணப்படுகிறது. எந்நேரமும் இடிந்து விழும் தருவாயில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.-மாரியப்பன், எர்ரனஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25228

ஏலம் விடப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து தொட்டிபட்டி பகுதியில் சேமூர் ஏரியில் பல ஆண்டுகளாக மீன்பிடி ஏலம் விடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் நூற்றுக்கணக்கானோர் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். விடுமுறை நாட்களில் நீச்சல் தெரியாத பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கூட மீன்பிடிக்கும் ஆர்வத்தில் தூண்டில் வைத்து மீன் பிடிக்கும் போது ஏரியில் தவறி வீழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீன்பிடி ஏலம் விரைந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சண்முகம், தொட்டிப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick