Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jan 2023 3:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25637

சேதமடைந்த சாலை

சாலை

ஓசூரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது விகாஸ் நகர் உள்பட அனைத்து இடங்களிலும் சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.-மீனா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25636

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கண்ணனஅள்ளி பகுதியில் ராஜவீதி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த வீதிகளை ஒட்டியுள்ள ஏரியில் இருந்து வெளியேறும் விஷ பூச்சிகள் சாக்கடை கால்வாய்களில் தஞ்சம் புகுவதுடன் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாபு, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25635

மாணவிகள் விடுதிக்கு தண்ணீர் வசதி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள தரைமட்ட தொட்டியில் தண்ணீர் எடுக்க 5 அடி உயரமுள்ள தடுப்பு சுவர் மீது ஏறி குதித்து எடுத்து வருகின்றனர். எனவே மாணவிகள் விடுதிக்கு தண்ணீர் வசதி செய்து தரப்படுமா?-கிஷோர், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25634

பழுதான உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாட்டம் லளிகம் ஊராட்சி லளிகம் மேல்வீதி பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர் கோபுர மின்விளக்கு தற்போது எரிவது இல்லை. இதனால் இலளிகம்- மிட்டாரெட்டிஅள்ளி வளைவு சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதான உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சந்தோஷ், லளிகம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25633

சுகாதார கேடு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் கோழிமேக்கனூர் பஸ் நிலையத்தில் தனியார் டீ கடைகள், பேக்கரிகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளிலும், நிழற்கூட பகுதிகளிலும் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்க அதிகாரிள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜாமணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25632

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிராமப்புறத்தினர் அத்தியாவசிய பொருட்கள், துணிகள் வாங்க அரூருக்கு வருவது வழக்கம். இதனால் அரூர் கடைவீதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடைகள் முன்பு வானங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25631

குரங்குகள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. மின் கம்பிகளில் விளையாடும் குரங்குகள் 4 ரோடு பகுதியில் தொழில் செய்து வரும் கடை உரிமையாளர்கள் அவைகளை விரட்டுவதற்குள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25480

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பழைய பாளையம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஏரியின் நடுவில் நீருக்குள் சாய்ந்த நிலையில் சில மின் கம்பங்கள் காணப்பட்டு வருகிறது. அந்த கம்பத்திலிருந்து மின்சாரம் செல்வதால் அப்பகுதி பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே அங்குள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கவோ அல்லது உயரப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.-சேகரன், பழையபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25470

விரிசல் விழுந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் வலையபட்டி அருகே அரூர் புதூரில் உயர்மட்ட குடிநீர் தொட்டி சேதமான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த தொட்டியில் இருந்துதான் தற்போது வரை தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த குடிநீர் தொட்டியில் கான்கிரீட் உடைந்து இரும்பு கம்பிகள் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பொிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும்.-ராமசாமி, வளையபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25457

விபத்து ஏற்படுத்தும் மணல்

சாலை

நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன. பஸ்கள், லாரிகள் செல்லும்போது பாலத்தின் நடுவில் சேரும் மணல் சாலையில் குவிகின்றது. இதனால் பஸ்கள் செல்லும் போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பாலத்தில் ஒதுங்கும்போது மணல் மேல் சென்று சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் காவிரி ஆற்றின் மீது உள்ள இரண்டு பாலத்திலும் மணலை சுத்தம் செய்ய வேண்டும் என்பது இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் எதிர்பார்ப்பு.-மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25446

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் சோழசிராமணி ஊராட்சியில் வெய்யகஞ்சான்புதூர் பஸ் நிறுத்தம் முதல் தேவம்பாளையம் செல்லும் சாலை வரை தார் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகளின் கவனத்தில் கொண்டு தார் சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.-சுதர்சன், சோழசிராமணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#25441

தெருநாய்களால் மக்கள் அச்சம்

மற்றவை

சேலம் 8-வது வார்டு சிண்டிகேட் பேங்க் காலனி, வள்ளலார் நகர், மகேந்திரபுரி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் மக்களை துரத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இந்த தெருநாய்களை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ந.சண்முகசுந்தரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick