Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jan 2023 2:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25830

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மின்விளக்கு சில நாட்களாக எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இங்கு தங்கி படிக்கும் செவிலியர்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்விளக்கை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25829

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சி வெங்கட்ராமன் கொட்டாய்க்கு மற்றும் மாரியம்மன் நகர் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பள்ளிக்கு வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.-பழனிவேல், மொரப்பூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25828

ஏரியில் வீசப்பட்ட அரசு குப்பை தொட்டிகள்

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் சுஞ்சல்நத்தம் ஊராட்சி காமராஜ் பேட்டையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் அங்குள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளன. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால் குப்பை தொட்டிகள் அனைத்தும் வெளியே தெரிகிறது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் ஏரியில் வீசப்பட்டதால் பொது மக்கள் குப்பைகளை சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பை தொட்டிகளை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#25674

பராமரிக்க வேண்டிய மயானம்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி மயானம் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் பிணங்களை எரிக்க முடியாமல் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மயானத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-முருகன், மல்லமூப்பம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#25672

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

சேலம் இரும்பாலை கணபதிபாளையம் முதல் கேட்டு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் பயணிகள் நிற்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-அருண்குமார் இரும்பாலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#25671

சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தும்பல் ஊராட்சி மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.-பூவிழி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#25670

மின்கம்பம் அகற்றப்படுமா?

மின்சாரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 4-வது வார்டு, சின்ன பெரியம்பட்டி பகுதியில் மின் கம்பம் சாலையின் நடுவே உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரங்கநாதன், பெரியம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25668

கால்நடை டாக்டர்கள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதியம்பட்டி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இதனால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சண்முகம், மதியம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:02 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25643

சாலை விரிவுபடுத்தப்படுமா ?

சாலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்லும் பாதையின் அருகில் பச்சியம்மன் கோவில் தெருவில் பாதை மிக குறுகியதாக உள்ளது. மேலும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த தெருவில் உள்ள சாலையை விரிவுபடுத்தி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சீனி, திருசெங்கோடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25642

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பேட்டைபாளையம் பஞ்சாயத்தில் மேற்கே செல்லும் சாலையில் மயானம், திடக்கழிவு மேலாண்மை மையம், பொது சுகாதார கழிவறை போன்றவை அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் மயானம், கழிவறைகள் சேதமடைந்து உள்ளன. தற்போது சாலை ஓரமாகவே இறந்தவர் உடல் புதைக்கப்படுகிறது. குப்பை கொட்டப்படுகிறது, தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.-சங்கர், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 4:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25641

கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலாவில் உள்ள மண்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை கொண்டு வருவர். வெளியூர்களில் இருந்து மெட்டாலா வழியாக கொல்லிமலைக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பயணிகள், மாணவர்கள், வியாபாரிகள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கு வருபவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே நவீன வசதியுடன் கழிப்பறை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25638

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காந்தி சிலை முதல் குப்பம் செல்லும் சாலை வரை கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.-ரமேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick