Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jan 2023 3:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25856

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாற்றுப்பாதை அடிவாரத்தில் முள்ளுக்குறிச்சியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் எதிரே நிழற்கூடத்தில் ஜன்னல், கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மதுபிரியர்கள் பாட்டில்களை அங்கே போட்டும், பொருட்களை நெருப்பு வைத்து எரித்தும் சென்றுள்ளனர். இதனால் இந்த பயணிகள் நிழற்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-நாராயணன், முள்ளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25855

புகைமூட்டத்தால் விபத்து அபாயம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவேரி பாலம் அருகே சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையில் அடிக்கடி தீ பற்றி புகை மூட்டம் ஏற்படுவதால் கரூர் மாவட்ட பகுதியில் இருந்து பரமத்திவேலூருக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்கள் புகை மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தடுத்து சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25854

சாக்கடை கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சி கிராமம் பழனியப்பார் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.-முருகேசன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#25853

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 26-வது வார்டில் ராஜகண்ணு தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் முறையாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#25849

உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

சேலம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி எதிரே அமைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கு சரிவர எரியவில்லை. இரவு நேரங்களில் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். சில நேரங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த உயர்கோபுர மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-வேல்முருகன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#25845

அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம்

மற்றவை

சேலம் ஊராட்சி ஒன்றியம் சேலத்தாம்பட்டி ஊராட்சியில் 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் மிகவும் பழமையானதாகும். இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#25844

பொதுக்கழிப்பிடம் புதுபிக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம் ஊராட்சி ஒன்றியம் மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி இரும்பாலை போலீஸ் நிலையம் அருகே பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த கழிப்பிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மங்களம், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25837

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எச்சம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் சாலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பொன்னுசாமி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25836

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பைபாஸ் சாலையில் இருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் செல்லும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கண்ணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25834

அறிவிப்பு பலகை வைக்கலாமே!

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் கட்டண தகவல் குறித்த அறிவிப்பு பலகை வைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தாங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சேவை மையம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடைபெற்று வருகிறது. எனவே இ-சேவை மையங்களில் கட்டண தகவல் பலகை வைத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்ய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#25833

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் சமீபத்தில் சாலைகள் சீரமைக்கப்பட்டதுடன் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணியும் நடந்தது. ஆனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் சாலைகளின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்காமல் உள்ளனர். இதனால் இரு திசைகளிலும் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை சீரமைக்கும் பணி முடிவடையும் முன்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 2:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#25832

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கலாமே!

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி- சேலம் பைபாஸ் சாலையில் நல்லம்பள்ளி அருகே உள்ளது அதியமான்கோட்டை துணை மின்நிலையம். அப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வேகமாக வந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பசுபதி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick