Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Jan 2023 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26113

ஆக்கிரமிப்பில் சாலை

சாலை

சேலம் கந்தம்பட்டி பகுதியில் இருந்து சித்தர் கோவில் வரை உள்ள சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் அதிகம் செல்கின்றன. இந்த சாலை அகலமாக இருந்தது. தற்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் குறுகி காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.-ரமேஷ், சிவதாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26112

மின்விளக்கு வேண்டும்

மின்சாரம்

சேலம் இரும்பாலை மோகன்நகரில் இருந்து சர்க்கார் கொல்லப்பட்டி செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை வழியாக இரவு நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அச்சத்துடன் செல்கின்றனர். அந்த சாலையில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.- குருபாலன், இரும்பாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26111

நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சைக்கிள் மற்றும் பஸ்களில் சென்று படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவிகளை அருகில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் மற்ற பள்ளிகளின் மாணவர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டியன், நங்கவள்ளி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26110

சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் இருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் அண்ணாமலை பட்டி அருகே சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் கொட்டி வருகிறார்கள். இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ரோட்டோரம் திறந்தவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜா, சென்னம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26109

நோய் பரவும் அபாயம்

குப்பை

தர்மபுரி மாவட்டம் வெள்ளிசந்தையில் பாலக்கோடு - ஓசூர் மெயின் ரோட்டில் சாலை குறுக்கே உப்பம்பள்ளம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பிக்கனஅள்ளி, ஜக்க சமுத்திரம் ஆகிய 2 ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், அழுகிய உணவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவதால் ஆற்று நீர் மாசுபடுவது மட்டுமின்றி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பன்றிகள் குப்பை கழிவுகளை கிளறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26108

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ராயக்கோட்டை சாலையில் சாலை ஓரங்களில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதி குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-பாஸ்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26107

குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சி நேருநகர் ராஜராஜன் தெருவில் குடிநீர் பிரச்சினை கடந்த ஆறு மாத காலமாக உள்ளது. வாரத்தின் ஒரு முறைகூட குடிநீர் வருவதில்லை. மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் இதுவரை கொண்டுவரவில்லை. மேலும் இந்த பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர் வாராததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முன் வரவேண்டும்.-பிரவீன், தடங்கம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26106

புதுப்பிக்க வேண்டிய சாலை

சாலை

ஓசூர் மாநகராட்சியில் 22-வது வார்டில் சாலைகள் மேடும் பள்ளமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முனீஸ்வரன் கோவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரூபா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26104

பயன்படாத கழிப்பிடம்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ்நகரில் இலவச மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அந்த கழிப்பிடத்துக்கு குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.-சிவபாலன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26102

தெருநாய்களால் அச்சம்

மற்றவை

கிருஷ்ணகிரி நகர பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26100

சந்துகடைகளில் மதுவிற்பனை தடுக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்ன மட்டாரப்பள்ளி ஊராட்சி பசவன்ன கோவில் பகுதியில் சந்துகடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த மது விற்பனையால் அப்பகுதியில் உள்ள இளைஞர்களும், தொழிலாளர்களும் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு சாலைகளில் செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#25857

குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடம் அருகில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிழற்கூடத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு தண்ணீர் தொட்டி தாகம் தீர்த்தது. தற்போது அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை. கோடை காலம் நெருங்குவதால் பயணிகளும், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயன்பெறும் வகையில் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பயணிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick