Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jan 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26301

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு - பொம்மிடி செல்லும் சாலையில் உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு உள்ள மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியே வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26300

மூட வேண்டிய உறைகிணறு

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சி கோடுப்பட்டி அருகே சின்னாறு பகுதியில் அனுமதி இல்லாமல் உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி யானைகள் நடமாடும் பகுதியாகும். மேலும் இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உறை கிணற்றை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-சின்னராஜ், கோடுபட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26298

புதிய குடிநீர் குழாய்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சியில் குடிநீர் குழாய் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்வதால் கால்வாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேறு இடத்தில் புதிதாக குடிநீர் குழாயை அமைக்க வேண்டும்.-மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26297

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகில் தின்னகுட்லானஅள்ளி பகுதியில் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. வேகமாக காற்று வீசினால் மின்கம்பம் கீழே சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். ஆபத்தான இந்த மின்கம்பத்தை சரிசெய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-வெங்கடாசலம், தின்னகுட்லானஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26296

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் சாலையின் இருபுறமும் சாலையோர கடைகள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இந்த சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சதீஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26294

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஓசூர் உழவர் சந்தை அருகே நீலமேகநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் கடிக்க செல்வதும், துரத்துவதுமாக இருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சங்கர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26293

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளியில் தெருவிலும், ஏரிக்கரை ஓரத்திலும் குப்பைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரூபேஷ், கொத்தகொண்டப்பள்ளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26291

ஆபத்தான காம்பவுண்டு சுவர்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அத்திக்கானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த காம்பவுண்டு சுவரை அகற்றி விட்டு புதிய காம்பவுண்டு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரமேஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26117

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் இலுப்புலி முதல் கோ.எளையாம்பாளையம் வரையில் உள்ள சாலை மிகவும் பழுது அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாதபடி காட்சி அளிக்கிறது. மேலும் குண்டும், குழியுமாக காணப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வாகனங்கள் கடும் சிரமப்பட்டுகின்றனர். இதனால் உடனே இதனை புதுப்பிக்க வேண்டும் என்று பல முறை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போரட்டம் நடத்தி எந்த ஒரு பயனும் இல்லை. எனவே சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?-மணி, கோ.எளையாம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26116

தேங்கும் கழிவுநீர்

தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கொண்டரசம்பாளையம் அருந்ததியர் காலனியில் இருபுறமும் கழிவுநீர் செல்லும் வகையில் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு இடத்தில் அடைப்பு ஏற்பட்டும் பழுதடைந்தும் உள்ளதால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் செல்லும் வழியில் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சையத் அஸ்லாம்- கந்தம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26115

லாட்டரி சீட்டு விற்பனை

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. காலை வேளையில் தினசரி மார்க்கெட் பகுதி, வெள்ளப் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், அலவாய்பட்டி மற்றும் அத்தனூர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்தி வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26114

ஆக்கிரமிப்பில் நினைவுச்சின்னம்

ஆக்கிரமிப்பில் நினைவுச்சின்னம்மற்றவை

சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையம் அருகே மகாத்மா காந்தி வந்து சென்றதன் நினைவாக "சத்திய சோதனை" புத்தக வடிவிலான நினைவுச் சின்னம் பல ஆண்டுகளாக ஒரு வரலாற்று சின்னமாக இருந்தது. ஆனால் தற்போது "சத்திய சோதனை" புத்தக வடிவிலான நினைவுச் சின்னம் மறைத்து கடை உள்ளது. ஒரு வரலாற்று சின்னம் முற்றிலும் மறைக்கப்பட்டது கவலையாக இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பூபதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick