Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Dec 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#24083

குடிநீர் தேவை

தண்ணீர்

சேலம் யூனியன் ஆண்டிபட்டி பஞ்சாயத்தில் லட்சுமி நகர் மற்றும் பனங்காடு ஆயாநகர் பகுதிகளில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் குழாய்கள் அமைத்து 2 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்தி, பனங்காடு, சேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24078

அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் இட்டிக்கல் அகரம் ஊராட்சி பாலகுறி கிராமத்தில் ராயக்கோட்டை மெயின் ரோட்டில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வெளியேறி வருகிறது. மேலும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சில பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்து குழாயை சரி செய்ய வேண்டும். -சூரியபெருமாள், பாலகுறி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24077

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சி ஜாகீர்மோட்டூர் தாசரப்பள்ளி ரோடு, பாஷா நகரில் சாலையோரம் குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறி வருகிறது. இது பல மாதங்களாக இதே நிலையில் தான் காணப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். -ஜோசப்பன் அய்யப்பன், வெங்கடாபுரம், கிருஷ்ணகிரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24076

சேதமடைந்த பாலம்

சேதமடைந்த பாலம்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் சித்தகம் பள்ளி பாம்பாற்றின் குறுக்கே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலம் மிகவும் பழுதடைந்து கம்பிகள் தெரியும் வண்ணம் உள்ளது. இதனால் இச்சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே உடனடியாக இந்த சாலையை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கண்ணன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#24075

அடிப்படை வசதி இல்லாத பள்ளி

அடிப்படை வசதி இல்லாத பள்ளிமற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. அந்த பள்ளிக்கு அடிப்படை கட்டிட வசதிகள் ஏதுமின்றி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். போதிய கட்டிடம் இன்றி இயங்கி வரும் பள்ளி கடந்த ஆறு மாதங்களாக மழைநீரால் மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தேங்கியுள்ள மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்றியும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். -பாலா,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24074

தெருவிளக்கு அவசியம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமம் அருந்ததியர் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதிக்கு தெருவிளக்கு அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அருள், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24073

புதிய தார்ச்சாலை

புதிய தார்ச்சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பு சாலையில் இருந்து சாமிசெட்டிபட்டி ஊராட்சி மானியதஅள்ளி சந்திப்பு வரை உள்ள தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த தார் சாலை குண்டும் குழியுமாக மாறி, ஜல்லிக்கற்கள் முழுமையாக ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கிறது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பழனி, சாமிசெட்டிபட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#24072

பஸ் நிலையத்தில் கெடிகாரம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பஸ் நிலையம் உள்ளது. அந்த பஸ் நிலையத்திற்கு குறைந்தது 25-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் ெகடிகாரம் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு பயன்படும் ெகடிகாரத்தை பஸ் நிலையத்தில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சத்யா சிவகுமார் மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23938

வாகனம் நிறுத்துமிடம்?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகில் வார சந்தை இயங்கி வருகிறது. அங்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களை பஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிரி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23937

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி ஊராட்சியில் கட்டபொம்மன் நகர் பிரிவு ரோடு அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த செடி, கொடிகளை அகற்ற மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நல்லதம்பி, வேட்டாம்பாடி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23936

பகலில் எரியும் மின்விளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து ஓ.சவுதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஓ.சவுதாபுரத்தில் இருந்து அக்கரைப்பட்டி செல்லும் சாலையில் மின்விளக்கு பகல் இரவு என்று பாராமல் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே இரவு நேரங்களில் மட்டும் மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரிமுத்து, ஓ.சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23935

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனுர் பைபாஸ் சாலையில் தனியார் மருத்துவமனை மற்றும் பழைய ஏ.வி.ஆர். ரவுண்டானாவுக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிசங்கர், நெடுஞ்சாலை நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick