Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Dec 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23934

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரிய ஏரி ஊராட்சி பிள்ளையார் கோவில் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த குடிநீர் தொட்டியின் 4 தூண்களும் சேதமடைந்து உள்ளது. இதேபோல் தொட்டியின் மேல் பகுதியிலும், அடிப்பகுதியிலும் கான்கிரீட் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. குடிநீர் தொட்டிக்கு அருகில் உள்ள குழாய்களில் பொதுமக்கள் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி சிறுவர்கள் அந்த குடிநீர் தொட்டிக்கு கீழ் விளையாடி வருகின்றனர். எனவே...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#23933

விரைவுபடுத்தப்படுமா? சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் மாவட்டம் 24-வது வார்டு கந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் தொடங்கப்பட்ட சாக்கடை மற்றும் சாலைப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயா, கந்தம்பட்டி எம்.ஜி.ஆர் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23932

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் இரும்பாலை சாலையில் வேகத்தடை மற்றும் சாலையோர தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பாலத்திற்கு அடியில் சமூகவிரோதிகள் மது அருந்தி வருவதால் பொது மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள், வேகத்தடை அமைக்க வேண்டும். சேகர், இரும்பாலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23923

குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் சாக்கடை கால்வாயில் குடத்தை வைத்து குடிநீர் பிடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கன்வாடி பள்ளி அருகில் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23922

கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திறந்த வெளியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலப்புகள் அமைத்து மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாய் முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23921

திறக்கப்படாத கழிப்பறை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது வரை இந்த கழிப்பறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கதிர், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23920

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை வரை அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, தானிப்பாடி வழியாக 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரூரிலிருந்து மொரப்பூர் செல்லும் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின் போது ஒகேனக்கல் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே உடைந்த கடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23919

வேகத்தடைகள் அவசியம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி 3 மாநில எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகரத்தில் அடிக்கடி தொடர்ந்து அதிவேகமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இப்பகுதியில் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23918

பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து சிகரலப்பள்ளி, கந்திலி வழியாக திருப்பத்தூர் வரை செல்லும் நகர பஸ்கள் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை. இந்த பஸ்களில் சென்று வந்த பொது மக்கள், மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே வழக்கமாக இயங்கி கொண்டிருந்த நகர பஸ்களை மீண்டும் இயக்க பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23917

பன்றிகள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரியில் நகர மற்றும் கிராம பகுதிகளில் பன்றி தொல்லை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம், அகசிப்பள்ளி, முல்லை நகர் அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் சுற்றி திரிகின்றன. சாக்கடை கால்வாய்களை பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23916

பூங்கா அமைக்கப்படுமா?

பூங்கா

ஒசூர் மாநகராட்சியில் 37-வது வார்டு எஸ்.பி.எம். காலனியில் பூங்கா அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் ஒதுக்கப்பட்டது. இதுவரை பூங்கா அமைக்கப்படவில்லை. தற்போது அந்த இடத்தில் புதர் மண்டி காட்சியளிக்கிறது. எனவே பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனிராஜ், ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:36 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23674

வேகத்தடை அவசியம்

சாலை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாத்திரிபுரம் கிராமத்தில் புதுச்சத்திரம் செல்லும் சாலையில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.உதயகுமார், தத்தாத்திரிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick