Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Dec 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23673

சாலையில் பெரிய பள்ளம்

சாலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே பெரிய பள்ளம் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி விபத்தை தடுக்க பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வ.அருண்குமார், குப்புச்சிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23672

சாக்கடை கால்வாய் தேவை

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சி பழனியப்பார் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும். -மணி, பேளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23671

பசியால் வாடும் குரங்குகள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி கணவாய் மேட்டில் தணிகை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழங்களை அந்த குரங்குகளுக்கு போட்டு செல்வார்கள். தற்போது அங்கு சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது. இதனால் சாலையோரங்களில் உணவுக்காக குரங்குகள் தவித்து வருகின்றன.. அவைகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே அந்த குரங்குகளை பிடித்து மாற்றுப் பகுதிக்கு கொண்டு செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23669

பாதியில் நிற்கும் சாக்கடை, சாலை பணிகள்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் 24-வது வார்டு கந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் தொடங்கப்பட்ட சாக்கடை கால்வாய் மற்றும் சாலைப்பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் சாலைகளிலும் நீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. இப்பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. அதிகாரிகள் கவனம் செலுத்தி இப்பணிகளை முடித்து தர வேண்டும். -விஜயா, கந்தம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23668

தரைபாலத்தில் தேங்கும் மழைநீர்

தரைபாலத்தில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மேல்காமாண்டப்பட்டி மெக்கன்தெரு பகுதியில் ரெயில்வே தரைப்பாலத்தில் 2 மாதங்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மேச்சேரி பைபாஸ் சாலை வழியாக செல்ல பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, மேல்காமாண்டப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23667

உயர் கோபுர மின் விளக்கு, வேகத்தடை தேவை

மின்சாரம்

சேலம் அருகே இரும்பாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி பஸ் நிறுத்தம் பகுதியில் போதிய தெருவிளக்குகள் வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், பொதுமக்கள் நடமாட அச்சம் அடைந்துள்ளனர். எனவே அங்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். மேலும் அதே பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடையும் அமைக்க வேண்டும். -கோவிந்தசாமி, இரும்பாலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23664

சாலை வசதி தேவை

சாலை வசதி தேவைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனபள்ளி முருகன் கோவில் அருகில் முருகர் நகர் 1, 2, 3 தெருவில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. ஆனால் போதிய ரோடு வசதி மற்றும் கால்வாய் வசதியோ இல்லாமல் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவாடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். -த.சரவணன், முருகர் நகர் 2-வது தெரு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23663

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைமற்றவை

ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த ஏரியின் இருகரையிலும் ஆகாயத்தாமரை அதிக அளவில் வளர்ந்து காட்சி அளிக்கிறது. எனவே ஏரியை ஆக்கிரமித்து ஆகாயத்தாமரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -சூர்யா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23662

சேதமடைந்த சாலைகள்

சாலை

ஓசூர் மாநகராட்சி மிடிகரப் பள்ளிசாலை உள்பட பல சாலைகள் மழையினால் சேதமடைத்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ேசதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். -சுரேஷ், மிடிகரப்பள்ளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23661

மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் நகர பஸ்கள் குறைந்த அளவு இயக்கப்படுகிறது. இவ்வழியாக செல்லும் புறநகர் பஸ்கள் அங்கு நிற்பது இல்லை. இதனால் அப்பிநாயக்கன்பட்டி, சென்னானூர், சந்தகொட்டாவூர், ஆற்றுப்பாலம். ஊமையனூர், வண்ணாம்பள்ளி கூட்ரோடு, தனியார் கல்லூரி, சமத்துவபுரம், அருணபதி, புலிக்குட்டை, ஆதிசக்தி நகர் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த நேரங்களில் நகர பஸ்களை ஊத்தங்கரை மற்றும் திருப்பத்தூர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23660

பராமரிக்க வேண்டிய அலுவலகம்

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு சான்றிதழ்கள் பெற நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.் இந்த அலுவலகம் முழுவதும் குப்பைகளாகவும், முட்புதர்கள் சூழ்ந்தும் காட்சி அளிக்கிறது. குடியிருப்புகளில் இருந்து வரும் சாக்கடை நீர் வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், அதிகாரிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23659

சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா நெக்குந்தி முதல் புதுப்பட்டி கிராமம் வரை உள்ள தார் சாலை மிகவும் மோசமானதாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை கொப்பலூர், நரசிபுரம், புதுப்பட்டி, எட்டிக்கூலி ஆகிய கிராமத்திலிருந்து பண்டஅள்ளி பள்ளி மற்றும் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை வழியாக 3 அரசு பஸ்கள் செல்கின்றன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தாமோதரன், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick