Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2024 6:03 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48514

லாரிகளால் இடையூறு

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலைய பகுதியில் அனுமதியின்றி லாரிகள், பள்ளி வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளுக்கும், பஸ்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் லாரிகள் காலையில் அதிவேகமாக பஸ் நிலைய வளாகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் லாரிகள், பள்ளி வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணா, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 6:03 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#48513

வேகத்தடை வேண்டும்

சாலை

பாலக்கோடு அருகே திம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விபத்து ஏற்படாத வகையில் வேகத்தடைகள் அமைத்து தர வேண்டும். -குரு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 5:59 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48512

சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இதனால் கால்நடை மருத்துவமனையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் மதுபாட்டில்களை மருத்துவமனை வளாகத்திலேயே வீசி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை மருத்துவமனையின் சுற்றுச்சுவரை சீரமைக்க முன்வர வேண்டும். -பிரசன்னன், தாளநத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 5:57 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#48511

சாக்கடை கால்வாய் அமைக்கலாமே!

கழிவுநீர்

கெலமங்கலம் தாலுகா ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்னுசாமி, எச்சம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 5:55 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#48510

குரங்குகளால் விபத்து அபாயம்

மற்றவை

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி முன்பாக மேலுமலை உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகள் அதிக அளவில் வருகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதியில் தாழ்வான சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. அந்த நேரம் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் குரங்கள் இருப்பதால், விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 5:53 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#48509

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சூளகிரி பஸ் நிலையம் எதிரில் பிரதான உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாக தான் உத்தனப்பள்ளி, ஓசூர் மற்றும் பிற ஊர்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்த மேம்பாலத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாதத்தில் பெரும்பாலான நாட்களில் இந்த விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. எனவே மேம்பாலம் அமைந்துள்ள பகுதிகளில் மின்விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 5:46 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#48508

புதர்மண்டிய பாதை

மற்றவை

பர்கூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழிப்பாதை அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு கல் மற்றும் மண் கொட்டப்பட்டது. தற்போது கொட்டப்பட்ட மண்ணும், கல்லும் சேர்ந்து திட்டாக மாறி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மின்வாரியத்திற்கு வரும் ஊழியர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து புதர்மண்டி திட்டாக இருக்கும் மின்வாரிய அலுவலக வழியை சீரமைத்து தர வேண்டும். -மதன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 6:47 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#48342

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?

போக்குவரத்து

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வள்ளுவர் சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அங்குள்ள மேம்பாலத்தை ஜவுளிகடை வரை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு மேம்பாலத்தை நீட்டித்தால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக செல்லும் பஸ்களை முறைப்படுத்தலாம். இதனால் அருணாசல ஆசாரி தெருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். மேலும் இந்த பாதையை கட்டாய ஒரு வழிபாதையாக ஆக்குவதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். -ராமசேசன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 6:45 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#48341

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

சேலம் டி.எம்.எஸ். பகுதியிலிருந்து பொன்னம்மாபேட்டை கேட் செல்லும் வழியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் எந்தவொரு பிடிப்பும் இன்றி கால்வாயின் உள்ளே அமைந்துள்ளது. மேலும் மின்கம்பம் சற்று சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறும் முன் மின்கம்பத்தை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 6:14 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48336

ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பு

தண்ணீர்

மோகனூர் காவிரி ஆற்றில் ஆகாயதாமரை கரையோரம் அதிக அளவில் படர்ந்துள்ளது. இதனால் ஆற்றங்கரைக்கு குளிக்க செல்லும்போது மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கரை பகுதியை ஆக்கிரமித்த ஆகாயதாமரையால் கரையோரத்தில் இருந்து ஆற்றின் மறு கரைக்கு செல்ல முடியாமல் உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் விஷபூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. எனவே ஆகாயதாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால் ஆற்றங்கரையை பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். -குப்புராஜ், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 6:11 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48335

நுழைவு வாயிலுக்கு கதவு

மற்றவை

கொல்லிமலை ஒன்றியம் சேலூர் நாடு ஊராட்சிக்குட்பட்ட வீரகனூர் பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நுழைவு வாயில் கதவு இன்றி திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அங்கு வரும் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் பள்ளியில் திருட்டு சம்பவம் எதுவும் நடைபெறும் முன் விரைந்து பள்ளியின் நுழைவு வாயிலுக்கு கதவு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாரத், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 6:03 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#48331

தேங்கும் மழைநீர்

தண்ணீர்

ஓசூர்- தர்மபுரி புதிய 4 வழி சாலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதில் பாலக்கோடு அருகே கர்த்தாரப்பட்டி- பாலக்கோடு செல்லும் பாலத்தின் கீழ் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். அதேபோல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் பணிகளை மேற் கொள்ள...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick