Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2024 6:01 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48330

கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

போக்குவரத்து

ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் கனரக வாகனங்களில் இரும்பு கம்பிகள், தகரம், குழாய் உள்ளிட்ட பொருட்களை ஆபத்தான முறையில் சாலையில் உரசும் படி கொண்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் உரிய பாதுகாப்பு இன்றி சாலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -சுரேஷ், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 6:00 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#48329

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

மற்றவை

பென்னாகரம் அருகே உள்ள குள்ளாத்திரம்பட்டி புதூரில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் நீண்ட நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது குடிக்கின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 5:58 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48328

பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கலாமே!

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. இதில் மின்விசிறி, செல்போன் சார்ஜ் போட மின்சார வசதி, பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க இரும்பு நாற்காலிகள் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நிழற்கூடத்தில் ஒரு சில நாற்காலிகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதி அடைகின்றனர். இதனால் பயணிகள் படிக்கட்டுகளிலும், சேதமடைந்த நாற்காலியின் கம்பியிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே அதிகாரிகள் பயணிகளின் நிலை அறிந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 5:56 PM GMT
Mr.Mohan | வேப்பனஹள்ளி
#48327

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் குப்பைகள் கொட்ட இடம் இல்லாமல் நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைத்து வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் ஊரின் எல்லை பகுதியில் குப்பைகள் கொட்ட தனி இடம் அமைக்க வேண்டும். -பர்வின், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 5:54 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#48326

ஓட்டல்களால் மரங்கள் சேதம்

மற்றவை

கிருஷ்ணகிரி-பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூரில் சாலையின் இருபுறமும் பிரியாணி கடைகள் உள்ளன. இந்த கடைகள் பிரியாணியை அங்குள்ள பழமையான புளியமரத்தின் அடியில் விறகு அடுப்பில் சமைக்கின்றனர். இதனால் அனல் காற்று புளியமரத்தில் வீசுவதால் இலைகள் கருகி சேதம் அடைகின்றன. மேலும் பிரியாணிக்கு வைக்கும் சுடுநீரை புளியமரத்தின் வேர் பகுதியில் ஊற்றுகின்றனர். சாலையோரத்தில் சமைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரத்தின் அருகே சமைக்காமல் வேறு பகுதி அல்லது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 5:52 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#48325

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

தண்ணீர்

பர்கூர் தாலுகா மல்லப்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகே மிகவும் பழமைவாய்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இந்த தொட்டியின் அருகே கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, மற்றும் குடியிருப்புகள் உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே தாமதம் இன்றி ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன்,...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 6:27 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#48160

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் பெரமனூரில் 40 அடி ரோடு உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக பணி முடிந்து வாகனங்களில் வருபவர்களையும், நடந்து வருபவர்களையும் துரத்தி சென்று கடிக்கிறது. எனவே இந்த வழியாக வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும் எனறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நாராயணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 6:24 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#48159

கழிவறை கட்டிடம் திறக்கப்படுமா?

மற்றவை

தம்மம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் 2-வது வார்டில் ஆண்கள் கழிப்பறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரமால் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் பூட்டி கிடக்கும் கழிப்பறை கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சர்வேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 6:13 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48155

தொலைவில் நூலகம்

மற்றவை

நாமகிரிப்பேட்டை நகர பகுதிகளில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் அரசு நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நூலகமானது தற்போது 3-வதாக புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நூலகம் நகரில் இருத்து தொலைவில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நகரின் மையப் பகுதியில் அரசு கட்டிடத்தில் நூலகத்தை அமைத்து தர வேண்டும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 6:11 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#48154

மாசடைந்த ஓடை

தண்ணீர்

சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் பின்புறம் சோமேஸ்வரர் ஓடை செல்கிறது. அங்கு சமீபத்தில் பெய்த மழையால் ஓடை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த ஓடையில் ஒரு சிலர் இறைச்சி கழிவு உள்பட பல்வேறு கழிவுகளை கொட்டிசெல்கின்றனர். இதனால் ஓடையின் நீர் தற்போது கருப்பு நிறமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் ஓடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாசடைந்த ஓடையை தூய்மைபடுத்தி தர வேண்டும். -நாகராஜன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 6:10 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48153

மின்கம்பத்தை ஆக்கிரமித்த கொடிகள்

மின்சாரம்

மோகனூர் அருகே அணியாபுரத்தில் இருந்து கே.புதுப்பாளையம் செல்லும் சாலையில் மாடக்காசம்பட்டிக்கும் தோளுருக்கும் இடையில் உள்ள பழைய கல்குவாரியின் அருகே மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் மேல் பகுதி வரை கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். -தம்பிதுரை, அணியாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 5:58 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48145

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

பாலக்கோடு எம்.ஜி.ரோடு அதிக அளவில் வணிக நிறுவனங்கள், உழவர்சந்தை, வங்கிகள், மருத்துவமனை என எப்போதும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும். இந்த சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு லாரிகள், கார்கள், நடைபாதை கடைகள் உள்ளிட்டவை சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -முரளிகிருஷ்ணன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick