Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 July 2024 5:57 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48144

குப்பை தொட்டி வேண்டும்

குப்பை

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே ஒரு சிலர் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் காற்று அதிகமாக வீசும் போது பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளில் உள்ள கவர்கள் பரவுகின்றன. எனவே பள்ளி வளாகம் அருகே குப்பை தொட்டியை வைத்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். -ஞானவேலன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 5:55 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48139

ஏரியூர் சாலையில் ஆபத்தான குடிநீர் குழாய்

சாலை

ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் குளத்தங்கரை பஸ் நிறுத்தம் அருகே அரசு ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் அறை உள்ளது. இந்த பகுதியில் ஆழ்துளை கிணற்றின் நீரேற்றும் குழாய் சாலையோரம் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் சாலையோரம் உள்ள நீரேற்று குழாயை உடனடியாக விபத்து ஏற்படாத வண்ணம் அமைத்து தர வேண்டும். -சாந்தி, பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 5:51 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48136

கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக கழிவு நீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த கால்வாயை கடக்கும் போது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஞானவேல், சிக்கமாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 5:50 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#48135

ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி சிந்தகம்பள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்ல பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மேல் மூடிகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. மேலும் சேதமடைந்த கம்பிகளுக்கு கீழே 5 அடி ஆழத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து சிலர் காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் தாமதம் இன்றி இந்த கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைத்து தர வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 5:49 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#48134

பல்லாங்குழி சாலை

சாலை

தேன்கனிக்கோட்டை சாரகப்பள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து இந்த பகுதி சாலையை சீரமைத்து தர வேண்டும். -ஈஸ்வரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 5:47 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#48132

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலூர் சாலையில் இருந்து பிருந்தாவன் நகர் 7-வது பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கற்கள் பெயர்ந்து சாலை பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை, பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத நிலையில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை விரைந்து சீரமைத்து கொடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். -பாலமுருகன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 6:03 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#47979

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகுல், இளம்பிள்ளை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 6:02 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#47978

கூடுதல் டெபாசிட் எந்திரம் இல்லை

மற்றவை

கெங்கவல்லி பகுதியில் அரசு, தனியார் வங்கிகள் அதிகளவில் உள்ளன. இந்த வங்கிகளுக்கு தினசரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு விடுமுறை நாட்களில் அவசர தேவைக்காக பண செலுத்துபவர்களுக்கு போதிய அளவில் டெபாசிட் எந்திர வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே வங்கிகள் கூடுதல் டெபாசிட் எந்திர வசதிகளை செய்து தர வேண்டும். -முருகானந்தம், கெங்கவல்லி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:57 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#47977

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலையில் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக பெருமளவிலான குடிநீர் பிரதான சாலையில் ஆறுபோல் ஓடி வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் சாலை பழுதடைவதுடன் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்க முன்வர வேண்டும். -அருண், எடப்பாடி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:53 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#47976

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் தேவூரில் இருந்து பிரிந்து காவேரிபட்டிக்கு செல்லும் சாலையில் சரபங்கா நதி பாலம் அருகே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், தேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:47 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#47971

ஆபத்தான வளைவு

போக்குவரத்து

நாமகிரிப்பேட்டை தாலுகா ஆர்.புதுப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான புதுப்பட்டி, காட்டூர், வெள்ளக்கல்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாமகிரிப்பேட்டையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் நின்றபடியும், தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க அந்த வழித்தடத்தில் தினசரி கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:43 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#47970

கூடுதல் பஸ்கள்

போக்குவரத்து

நாமகிரிப்பேட்டை தாலுகா ஆர்.புதுப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான புதுப்பட்டி, காட்டூர், வெள்ளக்கல்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாமகிரிப்பேட்டையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் நின்றபடியும், தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க அந்த வழித்தடத்தில் தினசரி கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick