Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Jun 2024 5:42 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#47969

நிழற்கூடம் பயன்பாட்டிற்கு வருமா?

மற்றவை

வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் பிரிவு சாலையில் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் தற்போது பயணிகள் பயன்படுத்த இயலாத வகையில் சிலர் மது அருந்திவிட்டு அந்த நிழற்கூடத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை, வெயிலுக்கு ஒதுங்ககூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்கூடத்தை பராமரிக்கவும், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் வேண்டும். -சங்கர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:33 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#47966

பல்லாங்குழி சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சி பில்பருத்தி புத்தர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். முக்கிய வழித்தடத்தை இணைக்கும் இந்த சாலை சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சில...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:28 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#47964

திறக்கப்படாத சுகாதார வளாகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சுகாதார வளாக கட்டிடம் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை சுகாதார வளாக கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும் புதியதாக கட்டப்பட்ட கழிவறையின் கதவுகள் உடைந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக சுகாதார வளாக கட்டிடத்தை சீரமைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும். -ஆறுமுகம், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:26 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#47963

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் மூலம் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் சாலையோரம் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன்கருதி சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். -மணி, சிக்கமாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:24 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#47962

கிணறு தூர்வாரப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சிகரலஅள்ளி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் பொது கிணறு உள்ளது. தற்போது இந்த கிணறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை உடனடியாக தூர்வாரி தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜ், காமராஜாபேட்டை.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:17 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#47959

வேகத்தடையில் வர்ணம் பூசலாமே!

சாலை

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகளில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாததால் பல இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் சப்-ஜெயில் சாலையில் உள்ள வேகத்தடைகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே சாலைகளில் உள்ள வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வர்ணம் பூச வேண்டும். மேலும் இரவில் ஒளிரும் விளக்குகளை பொருத்த வேண்டும். -சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:15 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#47958

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ரகமத்காலனி போலீஸ் நிலையம் முதல் விநாயகர் கோவில் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெரு முழுவதும் போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகவும், மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதி சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும். -சக்கரபாணி, ரகமத்காலனி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 5:14 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#47956

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சி இந்திரா நகரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் காற்று, மழைக்காலங்களில் மின்கம்பம் விழும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அப்பகுதியில் தாழ்வாக மின் ஒயர்கள் செல்கின்றன. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும். -முருகேசன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:44 PM GMT
Mr.Mohan | சேலம்
#12653

சுகாதார கேடு

சுகாதார கேடுமற்றவை

சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு ஊராட்சிக்குட்பட்ட பாத்திமா நகரில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த பன்றிகள் சாக்கடை கால்வாயை கிளறி விடுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுபற்றி ஏற்கனவே புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பன்றிகளை பிடித்து செல்ல வேண்டும். -மகபூப் பாஷா, பாத்திமா நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:43 PM GMT
Mr.Mohan | சேலம்
#12652

பயன்படாத குப்பை தொட்டிகள்

குப்பை

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஓலைப்பட்டி கிராமம் சிந்தாமணியூர் பாரப்பட்டி பகுதியில் குப்பை தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பை தொட்டியை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகேஷ், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:42 PM GMT
Mr.Mohan | சேலம்
#12651

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

சேலம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:36 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#12645

வேகத்தடை அவசியம்

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து புதுப்பட்டி வரை உள்ள சுமார் 10 கிலோமீட்டர் தூர சாலையில் பட்டணம், அய்யம்பாளையம், வடுகம், பனங்காடு உள்பட முக்கிய பகுதிகளில் சாலைகள் மிகவும் வளைவாக உள்ளது. இந்த சாலை அதிக போக்குவரத்து கொண்டதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்களை கவனிக்காமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பஸ், கார் போன்ற வாகனங்களும் குறுகிய வளைவில் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. எனவே விபத்து ஏற்படாமல் இருக்க பட்டணம் கிராமத்தில் இருந்து புதுப்பட்டி வரை உள்ள சாலையில் குறுகிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick