7 July 2024 6:11 PM GMT
#48154
மாசடைந்த ஓடை
சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் பின்புறம் சோமேஸ்வரர் ஓடை செல்கிறது. அங்கு சமீபத்தில் பெய்த மழையால் ஓடை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த ஓடையில் ஒரு சிலர் இறைச்சி கழிவு உள்பட பல்வேறு கழிவுகளை கொட்டிசெல்கின்றனர். இதனால் ஓடையின் நீர் தற்போது கருப்பு நிறமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் ஓடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாசடைந்த ஓடையை தூய்மைபடுத்தி தர வேண்டும்.
-நாகராஜன், சேந்தமங்கலம்.