Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Oct 2024 6:04 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50792

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரவுண்டானா அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக ரவுண்டானா அருகில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்கள் உடனே செல்லாமல் அந்த பகுதியில் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதே போல பகல் நேரத்தில் சரக்கு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:03 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50791

சேறும், சகதியுமான சாலை

சாலை

தேன்கனிக்கோட்டை அருகே குந்துகோட்டை ஊராட்சியில் ஏணிபண்டை கிராமம் உள்ளது. இந்த கிராம இணைப்பு சாலை மண்சாலை என்பதால் பருவ மழையால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த பகுதி பொதுமக்கள் தினசரி மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதனால் சிலர் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் ஆபத்தான முறையில் செல்ல வேண்டி உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? -மாதன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:02 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50790

டவுன் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து எம்.டி.வி. நகர், வெண்ணம்பள்ளி, எலத்தகிரி, கந்திகுப்பம் வழியாக பர்கூருக்கும், அங்கிருந்து ஜெகதேவி, அத்திகானூர், போச்சம்பள்ளி மற்றும் பர்கூரில் இருந்து காரகுப்பம், சிந்தகம்பள்ளி, பசவண்ண கோவில், குருவிநாயனப்பள்ளி, காளி கோவில் வழித்தடத்தில் டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டது. இந்த பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது மேற்கண்ட ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு சென்று வர மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:01 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50789

எலும்பு கூடான மின்கம்பம்

மின்சாரம்

தேன்கனிக்கோட்டை அருகே பெட்ட முகிலாலம் ஊராட்சியில் குல்லட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்குகின்றது. மேலும் சிெமண்டு பூச்சு பெயர்ந்து மின்கம்பம் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மின்கம்பம் அருகே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேல்முருகன், தேன்கனிக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 6:04 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#50621

கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!

போக்குவரத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உள்பட்ட கச்சராயனூர், கெண்டிநகர், வெள்ளாட்டுகாரனூர், மோட்டூர், ஆரிக்கவுண்டனூர், மாமரத்துக்காடு, கரும்பூசாலியூர் (எ) கோவில்பட்டி, ஆட்டுக்காரனூர் ஆகிய ஊர்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை வேலைகளில், பள்ளிக்கு சென்று வர போதுமான பஸ் வசதி இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ்களில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 6:03 PM GMT
Mr.Mohan | சங்ககிரி
#50620

நடைபாதை வசதி

சாலை

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊஞ்சக்கரை மோக்காட்டில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். சாலை ஓரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதனால் அவர்கள் சாலையின் நடுவே செல்கிறார்கள். மேலும் மாணவ-மாணவிகள் அந்த வழியாக செல்லும்போது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி சாலை ஓரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி நடைபாதை வசதி ஏற்படுத்தி தரப்படுமா? -சிவராஜ், ஊஞ்சக்கரை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 6:01 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#50619

நிழற்கூடம் தேவை

மற்றவை

ஓமலூரில் இருந்து தாரமங்கலம், மேட்டூர் மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. ஒரு சில பஸ்கள் பஸ்நிலையத்திற்கு வராமல் காந்தி சிலை அருகில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. பொதுமக்கள் வெயில், மழைக்காலங்களில் நின்று அவதிப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி அந்த பகுதியில் நிழற்கூடம் ஒன்று கட்டி தரவேண்டும். -வேலு, ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 5:17 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50606

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ரெயில் நிலையத்திற்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில் பயணிகள் ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ்நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா? -முருகன், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 5:16 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50605

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. அதன் அருகில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்று வருவதற்கு வசதியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையின் தரம் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுகுமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 5:15 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50604

பகலில் எரியும் தெருவிளக்கு

மின்சாரம்

வெண்ணந்தூர் அடுத்த தொட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேமூர் பெரிய ஏரி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு அணைக்கபடாமல் பகல் முழுவதும் எரிகிறது. இதனால் வீண் மின்சார செலவு ஏற்படுவது உடன் விரைவில் தெருவிளக்கு பழுதடைகிறது. மேலும் மின்கம்பத்தின் அருகே உள்ள செடி, கொடிகள் மின்கம்பியில் உரசியபடி உள்ளது. இதனால் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் பகலில் மின் விளக்கை பகலில் அணைக்கவும், உரசிய படி இருக்கும் செடி, கொடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 5:14 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50603

ஆபத்தான மரம்

மற்றவை

கந்தம்பாளையம் அடுத்த நல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகருகே அமைந்துள்ளன. பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றன. பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே மிகவும் உயரமான மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் காய்ந்து மரம் எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதியில் குழந்தைகள் சென்று வருவதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை பள்ளி நிர்வாகமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 5:12 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50602

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

வெண்ணந்தூர் அண்ணா சிலை எதிர்புறம் பிரதான சாலையின் அருகில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு இந்த மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிங்காரம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick