Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Oct 2024 5:00 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50601

கழிவறை தூய்மைப்படுத்தப்படுமா?

மற்றவை

ஏரியூரில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள கழிவறை திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கழிவறை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் இந்த கழிவறையை பராமரிக்க உரிய நபர்கள் நியமிக்கப்படாததால், கழிவறை முழுமையாக நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பஸ் நிலையத்திற்கு உள்ளையே, பொதுமக்கள் நுழைய முடியாத வண்ணம் துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக உரிய பணியாளர்களை நியமித்து, கழிவறையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 4:58 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50600

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

சாலை

ஏரியூரில் இருந்து மேச்சேரி செல்லும் பிரதான சாலையில் செல்லமுடி பஸ் நிலையப் பகுதியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படவில்லை. இந்த சாலையை தினசரி 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. தடுப்புச்சுவர் இல்லாத நிலையில் சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. எனவே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதாமுருகன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 4:57 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#50599

குண்டும், குழியுமான சாலை

சாலை

பாலக்கோடு நகரின் முக்கிய பகுதிகளான எம்.ஜி.ரோடு, ஸ்தூபி மைதானம், முருகன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தார்சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும். -இன்பரசன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 4:49 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50597

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி வெண்ணாம்பட்டி அவுசிங் போர்டு 60 அடிரோட்டில் தெருநாய்கள் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் காலையில் தெருவில் நடந்து செல்ல முடிவதில்லை. மேலும் குழந்தைகளையும் தெருவில் விட முடிவதில்லை. எப்பொழுது நாய்கள் வந்து கடித்து விடுமோ? என்று அச்சத்துடன் அந்த பகுதி பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -பாலாஜிராம், வெண்ணாம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 4:50 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50593

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் கொசமேடு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளது. நாய்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் விரட்டி கடிக்க வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை விரட்டுவதால் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களின் தொல்லையில் இருந்து பொதுமக்களை மீட்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ரிஷி, காவேரிப்பட்டணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 4:47 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50592

பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு பகல் நேரத்தி்ல் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே உள்ள மருத்துவ கல்லூரி, குருபரப்பள்ளி, சூளகிரி உள்பட பல பகுதிகளில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கிறார்கள். அதே நேரத்தில் இரவு 9 மணிக்கு மேல் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் அரசு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இடைப்பட்ட ஊர்களில் பயணிகளை இறக்குவதில்லை. இதனால் இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை கிருஷ்ணகிரி-ஓசூர் இடையே உள்ள ஊர்களை சேர்ந்த மக்கள் மிகவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:25 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#50444

கூடுதல் பஸ் நிலையம் தேவை

போக்குவரத்து

தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லை. இந்த பிரச்சினையை சரிசெய்ய கூடுதலாக ஒரு பஸ் நிலையம் மாற்று இடத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தி ெகாடுத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுவது குறையும். -சசிக்குமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 7:20 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50443

நடைமேடை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் கந்தம்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு இந்த நடை மேடையை சீரமைக்க வேண்டும். -சசிதர்மன், கந்தம்பட்டி.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:23 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50442

சாலை ஆக்கிரமிப்பால் விபத்து

சாலை

சேலம் ஜங்ஷன், இரும்பாலை ரோடு, புது ரோடு, முத்துநாயக்கன்பட்டி பிரிவு சாலையின் ஒரு பாதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்தி விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? -வெங்கடசலம், சுந்தர்நகர்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:22 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#50441

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு புவன கணபதி கோவில் தெருவில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அந்த தொட்டி நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும். -கோபால், இடங்கணசாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:21 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50440

குழாயில் குடிநீர் வருவதில்லை

தண்ணீர்

சேலம் தேவாங்கபுரம் எக்ஸ்டென்சன் தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் உள்ளது. ஆனால் அதில் குடிநீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:20 PM GMT
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#50439

எச்சரிக்கை பலகை தேவை

சாலை

நாமக்கல் மாவட்டத்தில் கன்னியாகுமரி-காஷ்மீர் நெடுஞ்சாலையில் உள்ளது தட்டாங்குட்டை. இங்குள்ள சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதால் இங்கு போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் அந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் கனரக வாகனங்கள் இவ்வூர் வழிழகு செல்கின்றன. இந்நிலையில் இங்கு அதிவேகமாக செல்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இங்கு விபத்துகள் ஏற்படாத வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick