Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Oct 2024 5:06 PM GMT
Mr.Mohan | வேப்பனஹள்ளி
#50961

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

வேப்பனப்பள்ளி ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அவதியடைகின்றனர். இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், வேப்பனப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:05 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#50957

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர் தாலுகா குட்டூரில் இருந்து காரிமங்கலத்தானூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்கிய வண்ணமே உள்ளனர். மேலும் இது பருவ மழைக்காலம் என்பதால் சாலையெங்கும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் விரைந்து தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -பன்னீர், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:34 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#50811

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

சேலம் மேயர் நகர் 7-வது தெருவில் குப்பை தொட்டி அருகே மின்கம்பம் உள்ளது. இதில் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் அங்குள்ள சாக்கடை கால்வாய்களில் இருந்து விஷபூச்சிகள் வெளியே வருகின்றன. பொதுமக்கள் இரவில் வெளியே செல்லும்போது அவர்களை கடிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எரியாமல் உள்ள மின்விளக்ைக சரி செய்யலாமே! -ராஜா, மேயர்நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:33 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#50810

ஆபத்தான கிணறுகள்

சாலை

சேலம் மாநகராட்சி 22-வது கோட்டத்திற்கு உட்பட்ட சிவதாபுரம் நம்பியான் வட்ட பகுதியில் சாலையையொட்டி 2 கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணறுக்கு போடப்பட்ட தடுப்பு சுவர் பக்கவாட்டில் இடிந்து விழுந்ததில் சாலை சரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதேபோல் மற்றொரு கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படும் முன்பாக இந்த கிணறுகளை சுற்றி புதிய தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். -தமிழ், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:25 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#50804

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கொல்லிமலையின் நுழைவு வாயில் கிராமமாக சோளக்காடு கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் விசேஷ காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு பழங்குடியினர் சந்தை மற்றும் பல்வேறு மளிகை கடைகள் முன்பு கல் போடப்பட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பாோக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:24 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50803

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மோகனூர் வட்டத்திற்குட்பட்ட வளையப்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனூா் செல்லும் வழியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே 8-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், மாணவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடித்துள்ளன. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ெதருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், -ஜெகன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:23 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50802

குண்டும், குழியுமான சாலை

சாலை

எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி- பீமநாயக்கனூர் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பீமநாயக்கனூர், நாமக்கல் செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் இரவு நேரம் வருவோர் சாலையில் உள்ள பள்ளம், மேடு தெரியாமல் தவறி கீழே விழுகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைப்பார்களா? -சண்முகம், எருமப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:20 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#50799

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

மற்றவை

கொல்லிமலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் நம் அருவியில் குளித்து விட்டு ஆர்வம் மிகுதியால் ஆபத்தை அறியாமல் அங்குள்ள தடுப்பு சுவரில் ஏறி நின்று புகைப்படம் எடுக்கின்றனர். இந்த தடுப்புசுவர் சுமார் 15 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எனவே அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -பிரகாஷ், கொல்லிமலை.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:12 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#50798

ஆபத்தான வளைவு

போக்குவரத்து

தா்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பொம்மிடி, மஞ்சவாடி ஆகிய பகுதிகள் தொடர் விபத்துகள் நடக்கும் இடங்களாக மாறி உள்ளன. இந்த நிலையில் சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு வரும் வழியில் அமைந்துள்ள கிழங்கு மில் அருகே சாலை வளைவாக இருப்பதால் இந்த பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதியும், சாலையோர மரங்களில் மோதியும் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே அதிகாரிகள் வளைவு பகுதியில் அறிவிப்பு பலகை அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஷ்வா,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:12 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50797

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், டீச்சர்ஸ் காலனி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் பயத்துடனேயே செல்கின்றனர். எனவே தெருநாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரி, வெண்ணாம்பட்டி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:10 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#50796

காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், மெனசி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி துறை மூலம் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பணி முடிக்கப்பட்டு 5 ஆண்டு காலமாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. மேலும் குடிநீர் சுத்திகரிப்பு வளாக கட்டிடத்தை சுற்றி தற்போது புதர் மண்டி செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே இந்த நவீன சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:08 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50794

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளி சந்தை சாலையில் கடந்த 6 மாதங்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதிைய கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படு்கின்றனர். இந்த பகுதியில் சாலையோரம் புதர் மண்டி கிடப்பதால் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. குழந்தைகள் நடமாடும் பகுதி என்பதால் இரவு நேரங்களில் மின்விளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கார்த்திக், சிக்கமாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick