Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Oct 2024 5:48 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#50985

சேதமடைந்த தரைப்பாலம்

போக்குவரத்து

சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ளது அங்காளம்மன் கோவில் தெரு. இந்த பகுதிக்கு செல்ல தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி திடீரென சேதமாகி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகனங்கள் செல்ல அவதிக்குள்ளாகிறார்கள். சேதமான பகுதியில் மேல் பேரிக்காடு வைத்து தடுக்கப்பட்டுள்ளது. அங்கு ெசல்ல தரைப்பாலத்தின் ஒரு பகுதி மட்டும் வாகனங்களும், பொதுமக்களும் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த தரைப்பாலத்தை சரிசெய்ய வேண்டும். -இனியவர்மன், வின்சென்ட்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:46 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#50984

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயன்படுத்த முடியாத சாலையை சீரமைக்க வேண்டும். -தீனதயாளன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:36 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50982

மின்கம்பத்தில் செடி, கொடிகள்

மின்சாரம்

வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி செல்லும் சாலையில் சவுரிபாளையத்தில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இதன் அருகே உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் செடி, கொடியில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன் மின் கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும். -விநாயகம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:34 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50981

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மோகனூர் வட்டம் எஸ்.வாழவந்தியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் ஏரிக்கு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து துரத்தி சென்று கடிக்கின்றன. இதன் காரணமாக கால்நடைகள் இறப்பு அந்த பகுதியில் அதிகமாக உள்ளது. எனவே தெருநாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். -பிரபாகரன், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:32 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50980

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

நாமக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு, ஆஞ்சநேயர் கோவில் கோட்டை பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள காலி நிலத்தில் கழிவுநீரானது தெப்பகுளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். எனவே கழிவுநீர் செல்ல கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:30 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50979

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

சாலை

நாமக்கல்-மோகனூர் செல்லும் வழியில் வகுரம்பட்டி பிரிவு சாலையில் சிங்கிலிபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி கற்கள், மணல் கொட்டப்பட்டது. ஆனால் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைகின்றன. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -விஜயன், சிங்கிலிபட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:16 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#50974

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

பாலக்கோடு அடுத்த பிக்கனஅள்ளி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் இரும்பு குழாய் உடைந்து சில மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா? -சாமிநாதன், பிக்கனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:15 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#50972

சரக்கு வாகனத்தில் பயணம்

போக்குவரத்து

ஏரியூர், பென்னாகரம், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சரக்கு வாகனத்தில் நின்றபடி பயணம் செய்கின்றனர். கூடுதல் ஆட்களை ஏற்றுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்று பயணம் செய்ய கூடாது என போலீசார் எச்சரித்தும் பொதுமக்கள், வாகன டிரைவர்கள் விதிமுறைகளை மீறுகின்றனர். எனவே விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அறிவுைர வழங்கி, அபராத தொகை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -காவியா, பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:14 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#50970

போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி, மேலுமலை, கொல்லப்பள்ளி உள்பட பல இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதனால் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேம்பாலம் கட்ட கூடிய இடங்களில் மட்டும் வாகனங்கள் 15 முதல் 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. எனவே மேம்பால கட்டுமான பணிகளை வேகப்படுத்திடவும், நெரிசலை தீர்க்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:13 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#50969

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. இந்த தெருநாய்கள் வாகன ஓட்டிகள், சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. இந்த தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:09 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#50967

சேதமான அங்கன்வாடி கட்டிடங்கள்

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது அங்கன்வாடி ைமயத்தின் தரைதளம் முழுவதும் ஈரமாக உள்ளதால் குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நேரும் முன் சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்து தர...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:07 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#50963

சேதமான அங்கன்வாடி கட்டிடங்கள்

மற்றவை

பர்கூர் தாலுகா காரக்குப்பத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழை பெய்யும் போது மழைநீர் மேற்கூரை வழியாக உள்ளே வருகிறது. எனவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏதும் நேரும் முன் தாமதமின்றி சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். -வேல்முருகன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick