Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2026 12:58 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#66362

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் குழந்தை ஏசு கோவில் முதல் சித்தர் கோவில் வரை சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும். பொதுமக்கள், வடக்குபொய்கைநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2026 12:57 PM GMT
Mr. Raja | திருவையாறு
#66361

தொற்றுநோய் பரவும் ஆபாயம்

குப்பை

தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் கோனேரிராஜபுரம் ஊராட்சியில் 5-வது வார்டில் உள்ள ஆழ்துளை கிணறு அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள், கோனேரிராஜபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2026 12:55 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#66360

உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்கு முளை ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் போதிய மின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. அருகே பஸ் நிறுத்தம் உள்ளதால், பயணிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு பொருத்தவேண்டும். பொதுமக்கள், ஆலடிக்குமுளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2026 12:52 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#66359

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலூகா நாச்சியார் கோவில் ‌வீரராகவபுரம் தெருவில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சிமெண்ட காரைகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்கிற நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிதாக கட்டிதரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2026 2:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#66217

மின் விளக்குகள் ஒளிருமா ?

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் தெருக்கள் இருள் சூழ்ந்து கிடப்பதால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், தொண்டராயன்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2026 2:11 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#66215

கொசுத் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆர்.வி. நகர், பழனியப்பன் தெரு, மயில் பாளையம் ,இந்திரா நகர் ,பெரிய கடை தெரு மற்றும் இதர பகுதிகளிலும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கொசு கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை நகர் பகுதியில் கொசு மருந்து அடிப்பதுடன், உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2026 2:10 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#66213

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் புத்தூரில் இருந்து புதுப்பட்டினம் சாலையில் பன்னீர் கோட்டகம் பஸ் நிலையம் அருகில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. அதனை முறையாக சீர்செய்யாமல் மணல் நிரப்பி மூடியுள்ளனர். அந்த பள்ளத்தில் மழை பெய்ததால், தற்போது குண்டும், குழியுமாக மாறி உள்ளது. அருகில் மிகப்பெரிய வாய்க்கால் இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பன்னீர் கோட்டகம் பஸ் நிலையம் அருகே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள், பன்னீர் கோட்டகம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2026 2:08 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#66212

அரசு ஆஸ்பத்திரி வேண்டும்

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள பொதுமக்கள் குத்தாலம் அல்லது காளி ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டி உள்ளது. அவசரத்திற்கு கூட சிகிச்சை பெற முடியாத நிலையில் மக்கள் சிரமத்தில் இருந்து வருகின்றனர். எனவே திருமணஞ்சேரியில் அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 2:16 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#66016

மின்விளக்குகள் ஒளிருமா ?

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் நகரின் முக்கியசாலை இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும் இருளில் அங்கு உள்ள வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டை கைக்காட்டி பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகளை ஒளிரவிட வேண்டும். பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 2:13 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#66013

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலை

தஞ்சை தேவி நகர் வடக்கு பூக்கொல்லை சாலை நடுவே மின்கம்பம் உள்ளது. ஏற்கனவே சாலை குறுகளாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தவேண்டும். பொதுமக்கள், தேவிநகர், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 2:11 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#66011

புதர்மண்டிக்கிடக்கும் ஆறு

புதர்மண்டிக்கிடக்கும் ஆறுதண்ணீர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை திப்பிராஜபுரத்தில்உள்ள திருமலை ராஜன் ஆற்றில் நாணல்களும், புதர்களும் மண்டி கிடக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இந்த ஆற்றில் சீராக தண்ணீர் செல்லாது. குறிப்பாக இதை நம்பியுள்ள கடைமடைக்கு முறையாக பாசனத்துக்கு தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட நீர் வளத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக திருமலைராஜன் ஆற்றை ஆக்கிரமித்துள்ள புதர்கள், நாணல்செடி, கொடிகளை தூர்வார வேண்டும். பொதுமக்கள், திப்பிராஜபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2026 2:14 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#65847

போக்குவரத்துக்கு இடையூறாக கம்பி

சாலை

பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகே சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக கம்பி ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் உள்ள கம்பியை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள், பட்டுக்கோட்டை. ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick