Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2024 7:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48885

சுகாதாரச் சீர்கேடு

சுகாதாரச் சீர்கேடுகுப்பை

வேலூர் சத்துவாச்சாரி, பேஸ்-2, நேதாஜி நகர், 2-வது தெருவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு பூங்காவை ஒட்டி உள்ள கட்டிடத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 7:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48884

மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

மின் விளக்குகள் பொருத்தப்படுமா?மின்சாரம்

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் விரைவு பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உயர்கோபுர மின்விளக்கு கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்தில் 6 மின்விளக்குகள் இருந்தன. அவற்றில் சில மின் விளக்குகள் பழுதானது. அதனை சரி செய்வதற்காக அகற்றப்பட்ட மின்விளக்குகள் மீண்டும் பொருத்தப்படவில்லை. அதனால் இரவில் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் விளக்குகளை உடனடியாக பொருத்த நடவடிக்கை எடுப்பார்களா? -நாகராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 7:45 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#48883

முறையாக போடாத சாலை

முறையாக போடாத சாலைசாலை

குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைத்தார்கள். ஆனால், அந்தச் சாலையை முறையாகப் போடவில்லை. பள்ளமும், மேடாகவும் உள்ளது. பள்ளத்தில் மழைநீர் தேங்குகிறது. ஒரு சீராகவே சாலை அமைக்கப்படவில்லை. தற்போது பள்ளமாக இருக்கும் இடங்களில் தார் கலவையை நிரப்பி சமன்படுத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். -ராஜா, பரதராமி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 7:37 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48882

மேம்பாலத்தில் சுகாதார சீர்கேடு

மேம்பாலத்தில் சுகாதார சீர்கேடுமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் மாலைப் பொழுதில் பொது மக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளின் சாணத்தால் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடாக இருக்கும் பாலத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 7:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48881

கழிவுமண் அகற்றப்படுமா?

கழிவுமண் அகற்றப்படுமா?குப்பை

வேலூர் பைபாஸ் சாலை ஓரத்தில் சேண்பாக்கம் பகுதியில் இருந்து கருகம்புத்தூர் செல்லும் சர்வீஸ் சாலையில், கால்வாய் அடைப்பை அகற்ற தோண்டப்பட்ட கழிவு மண்ணை அப்புறப்படுத்தவில்லை. இதனால் அருகில் உள்ள நடைபாதை பாதியளவு பயன்படுத்த முடியவில்லை. கழிவு மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திருமால்சுந்தரம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:44 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#48724

குண்டும் குழியுமான சாலைகள்

குண்டும் குழியுமான சாலைகள்சாலை

அரக்கோணம் தலைமை தபால் அலுவலக தெரு வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். அந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதேபோல் அசோக் நகர் பகுதியில் உள்ள ரத்தன்சந்த் நகர் பிரதான தெரு சாலையும் சேதமடைந்து, ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி குட்டையாக காட்சியளிக்கிறது. பழுதடைந்த சாலைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -தர்மராஜ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 26
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:42 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#48723

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

அரக்கோணம் நாகாலம்மன் நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் சாலையின் சந்திப்பு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தின் அடிபகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜித்தன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#48722

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர்பாளையத்தில் கலவையில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48721

பாழடைந்த பழைய வட்டாட்சியர் அலுவலகம்

மற்றவை

வாலாஜா நகரில் பஸ் நிலையம் எதிரில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் பாழடைந்துள்ளது. இந்த வளாகத்தில் இருந்த பல அரசு அலுவலகங்கள் வாலாஜா அரசு மருத்துவமனை எதிரில் மாற்றப்பட்டு விட்டன. தற்போது சார்நிலை கருவூலம், கூட்டுறவு சுய சேவை பிரிவு கடை, ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பல்வேறு வாகனங்கள் ஏலம் விடப்படாமல் பழுதடைந்து குவிக்கப்பட்டுள்ளன. சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48720

வாகன நிறுத்துமிட வசதி

மற்றவை

வாலாஜாவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அந்த அலுவலகத்துக்கு வரும் மக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லை. வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஞானசேகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48719

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எந்தத் தெருக்களில் பார்த்தாலும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான்சன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:32 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48718

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட குள்ளிகான்வட்டம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு ஊராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கடந்த 7 மாதங்களாக குப்பைகளை சரிவர எடுப்பதில்லை. இதனால் குப்பைகள் குப்பைத்தொட்டிலேயே தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். -திருமூர்த்தி, குள்ளிகான்வட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick