Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Jan 2025 7:48 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52847

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே பெரியகரம் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயனற்ற நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாலாஜி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:44 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#52845

தார் சாலை சேதம்

தார் சாலை சேதம்சாலை

போளூர் தாலுகா பெரியகரம் கிராமம் கல்லாங்குத்தில் இருந்து நைனாவரம், குன்னத்தூர் கிராமங்களுக்கு செல்ல ஒரு வருடத்துக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தத் தார் சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டதால் சமீபத்தில் பெய்த மழையால் சேதம் அடைந்து பெயர்ந்துள்ளது. நேற்று காலை அந்தப் பகுதியில் விவசாய நிலத்துக்கு விவசாயப் பொருட்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைக்க வேண்டும். -கோவிந்தராஜ், பெரியகரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#52844

முழுமை பெறாத கால்வாய் பணி

முழுமை பெறாத கால்வாய் பணிகழிவுநீர்

ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகர் பகுதியில் சீதாராமன் தெருவில் பக்க கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், கால்வாய் பணி முழுமை பெறாமல் உள்ளது. அதில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி உள்ளது. ஊராட்சி மற்றும் ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். -ராஜேந்திரன், வேலப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52843

தெரு விளக்குகள் பொருத்தப்படுமா?

தெரு விளக்குகள் பொருத்தப்படுமா?மின்சாரம்

வந்தவாசி பேரருவி நகரில் 3-வது தெருவில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் இரவில் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் இந்தத் தெருவில் மின்கம்பம் உள்ளது. ஆனால், மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. ஆதலால் மின் வாரியத்துறை, நகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமா? -மணிவண்ணன், தேனருவி நகர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52842

இணைப்பு மண் சாலை தேவை

சாலை

திருவண்ணாமலை மாவட்டம் மகமாயிதிருமணி கிராம தேவதையான மணியாத்தாள் அம்மன் கோவிலுக்கு ஊருணி பொங்கல் வைக்க பக்தர்கள் கழனி வரப்பு வழியாக செல்ல சிரமமாக உள்ளது. அரை பர்லாங் தூரம் கோவில் வரை மாந்தாங்கல் இணைப்பு மண் சாலையை அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள், கிராம மக்களுக்கு வசதியாக இருக்கும். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பவானி, மகமாயிதிருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:30 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#52840

அடிபம்பு பழுது

அடிபம்பு பழுதுதண்ணீர்

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பென்னாத்தூர் பேரூராட்சி கேசவபுரம் அருணாச்சல தெருவில் ஒரு ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்தப் பம்பு பழுதடைந்துள்ளது. அந்த அடிபம்பை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வே.சதீஷ்குமார், கேசவபுரம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:27 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#52839

நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் இருந்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையில் உள்ள கம்பங்களில் 10 மின் விளக்குகள் எரியவில்லை. மின் விளக்குகளை பராமரிக்கும் நிறுவனத்துக்கு பல முறை தகவல் தெரிவித்தும், அவர்கள் பழுதை சரி செய்யாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகள் எரிகின்றன. அதிகாலை நேரத்தில் மின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52838

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் கடந்தசில நாட்களாக எரியவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் எரியும் மின் விளக்குகளின் வெளிச்சம் சர்வீஸ் சாலை வரை இருக்கும். ஆனால், தற்போது மின் விளக்குகள் எரியாததால், சர்வீஸ் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்குமா? -அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:23 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#52837

தார் சாலை சேதம்

தார் சாலை சேதம்சாலை

காட்பாடி சில்க் மில் பகுதியில் இருந்து சட்டக்கல்லூரி செல்லும் தார் சாலை போடப்பட்ட 4, 5 மாதங்களிலேயே சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:19 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#52835

டவுன் பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்

போக்குவரத்து

ஆம்பூர்-பள்ளிகொண்டா மார்க்கத்தில் 18-ம் நம்பர் பஸ்கள் ஆரம்பத்தில் அதிகமாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஒரு நாளைக்கு 1 அல்லது 2 பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஊர்களுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகள் தனியார் பஸ்களில் பயணிப்பதால் அதிகம் செலவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்களை இயக்க முன்வர வேண்டும். -ரிஸ்வானா அக்பர், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 7:11 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#52833

இடிந்த கல்லூரி சுற்றுச்சுவர்

இடிந்த கல்லூரி சுற்றுச்சுவர்மற்றவை

காட்பாடி சில்க் மில் அருகில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் முன் பக்க சுற்றுச்சுவர் 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இடிந்த சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மு.ராமு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52635

ரேஷன் கடையை திறக்க வேண்டும்

மற்றவை

வேலூர் மாநகராட்சி 12-வது வார்டில் உள்ள கோபாலபுரம் விரிவுப்பகுதியில் உள்ள 11-வது தெருவில் ரேஷன் கடை புதிதாக கட்டப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், இன்னும் திறக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ரேஷன் கடைக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கோபாலபுரம் ரேஷன் கடையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மு.ராமு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick