Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Aug 2022 4:55 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#8599

பயன்பாட்டுக்கு வராத தானியக்கிடங்கு

பயன்பாட்டுக்கு வராத தானியக்கிடங்குமற்றவை

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2014-2015ம் ஆண்டு கட்டப்பட்ட தானிய கிடங்கு இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் மூடியே கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தானியக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ராமமூர்த்தி தெள்ளார்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:48 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#8598

பஸ் பயணிகள் நிழற்குடையை மறைத்து கட்டப்பட்ட சுவர்

பஸ் பயணிகள் நிழற்குடையை மறைத்து கட்டப்பட்ட சுவர்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பாவுப்பட்டு கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு வளைவு பகுதியில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அதில் செடி, கொடிகள், முட்புதர் வளர்ந்துள்ளது. முன் பகுதியில் சுவர் கட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டு கொண்டு வருவது மட்டுமின்றி, நிழற்குடையின் முன்னால் உள்ள சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குருமூர்த்தி, பாவுப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:19 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#8559

திருமண மண்டபம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு ஊராட்சி காலனி பகுதியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்பட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் அந்தத் திருமண மண்டபம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? கந்தன், தேவனாம்பட்டு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 12:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#8454

கால்வாய் ஆக்கிரமிப்பு

கால்வாய் ஆக்கிரமிப்புமற்றவை

ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை அருகே கமண்டல நாகநதி தடுப்பணையில் இருந்து பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய குதிரை கால்வாய் என்ற நீர்ப்பாசனக் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். அந்தக் கால்வாயை பலர் ஆக்கிரமித்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் கால்வாயை தூர்வாரி சீரமைத்து பையூர் ஏரிக்கு ஆற்றுப் பாசன நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். சீனிவாசன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 12:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#8449

புல், செடிகளை அகற்ற வேண்டும்

புல், செடிகளை அகற்ற வேண்டும்சாலை

ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு நோக்கி செல்லும் சாலையில், பழமை மிக்க பாலாறு பழைய பாலத்தின் மீது புல், ெசடிகள் வளர்ந்துள்ளது. இது பாலத்தின் மீது நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. அந்தப் புல், ெசடிகள் வளர்வது பாலத்தை மேலும் சேதம் அடைய செய்து விடும். பழமை மிக்க பாலத்துக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே புல், ெசடிகளை அகற்றி பாலத்தைப் பராமரிக்க வேண்டும். ஆர்.குணசேகரன், ராணிப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 12:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#8447

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து ஏ.கஸ்பா மெயின் ரோடு செல்லும் வழியில் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரோடு என்பதால் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும். கோகுல், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 12:14 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#8446

குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுது

குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதுதண்ணீர்

வாணாபுரம் அருகே உள்ள மெய்யூரில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சிறு மின்விசை தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்தத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. அதை இன்னும் சீரமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். சிவா, மெய்யூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 11:52 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#8442

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

கே.வி.குப்பம் பஸ் நிலையம் எதிரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதில் குடிநீர் குழாய் உடைபட்டு தண்ணீர் கசிந்து சாலையில் குட்டைபோல் தேங்கி நின்றது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் ெசய்தி வெளியிடப்பட்டது. தற்போது குடிநீர் உடைப்பு சீரமைக்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. மாணிக்கம், குடியாத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#8440

மண்மேடு அகற்றப்படுமா?

மண்மேடு அகற்றப்படுமா?சாலை

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ்ரோடும் - அரசு ஆஸ்பத்திரி ரோடும் சந்திக்கும் இடத்தில் பிள்ளையார் கோவில் பக்கத்தில் உள்ள மண் மேடு அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இந்த வழியாக வாகனங்கள் திரும்பும்போது வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மண்மேட்டை அகற்றுவார்களா? விநாயகம், குடியாத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 11:37 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#8439

அறிவிப்பு பலகை மீது செடி, கொடிகளை அகற்றுவார்களா?

அறிவிப்பு பலகை மீது செடி, கொடிகளை அகற்றுவார்களா?போக்குவரத்து

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதி அருகே குடியாத்தம் செல்லும் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டு அளவீடு குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அந்தச் செடி, கொடிகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றுவார்களா?மணிமாறன், பங்களாமேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 11:19 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#8436

உப்புகுளம் சீரமைக்கப்படுமா?

உப்புகுளம் சீரமைக்கப்படுமா?பூங்கா

அரக்கோணம் பஜார் தெருவில் உப்புக்குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுடன் குளத்தைத் தூர்வாரி புதுப்பித்தனர். தற்போது இந்தக் குளம் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பூங்கா இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மூழ்கி செடி, கொடிகள் வளர்த்து மாசடைந்துள்ளது. இந்தக் குளத்தைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 11:15 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8434

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொன்னாகளத்து மேட்டுத்தெருவில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தார் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். தமிழன், காவேரிப்பாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick