Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Feb 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53944

தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

போக்குவரத்து

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் தனியார் தொழிற்சாலை வாகனங்கள், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் கார்கள், 4 சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். -செந்தில்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:50 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#53943

புதிய கழிவறை பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

அரக்கோணம் நகராட்சி சோளிங்கர் ரோட்டில் ஸ்டேட் பாங்க் அருகில் மற்றும் சுவால்பேட்டை திருத்தணி ரோடு ஆகிய பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து புதிதாக கழிவறை கட்டினார்கள். அந்தக் கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே வைத்துள்ளனர். இதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிகாமணி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:46 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#53942

பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்

சாலை

ஆற்காடு பைபாஸ் சாலை தனியார் கல்லூரி அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கப்பட்டது. இதுவரை 30 சதவீத வேலைகள் கூட நடக்கவில்லை. இந்தப் பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் சாலை குறுகி காணப்படுகிறது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பாலத்தை விரைந்து கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணவாளன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53941

இலவச கழிப்பிட வசதி

மற்றவை

வாலாஜா பஸ் நிலையம் புதிதாகக் கட்டப்பட்டு திறந்து ைவக்கப்பட்டுள்ளது. பஸ் நிலைய வளாகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் காலை, மாலை இரு வேலைகளிலும் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தபடவில்லை. ஆகவே நடமாடும் இலவச கழிப்பிட ஊர்தியை கொண்டுவந்து பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆதவன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:34 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#53940

கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்

கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்மற்றவை

அணைக்கட்டு தாலுகா மராட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒருசிலர் அவசர சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு கூடுதல் மருத்துவர், நர்சுகளை பணியில் அமர்த்த மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமர், மராட்டிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:31 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#53939

கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் உள்ள மாவட்ட கிளை நூலகத்தில் 5 கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஆனால், அதற்கு கேபிள் இல்லாத காரணத்தால் செயல்படவில்லை. கம்ப்யூட்டர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53938

செடிகளால் கழிவுநீர் தேக்கம்

செடிகளால் கழிவுநீர் தேக்கம்கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் சாலை ஓரமுள்ள கழிவுநீர் கால்வாய் சிமெண்டு சிலாப் உடைந்து, அதில் செடிகள் வளர்ந்து கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்குகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53936

புகையால் வாகன ஓட்டிகள் அவதி

புகையால் வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகில் உள்ள சர்வீஸ் சாலை ஓரமாக மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அங்கு புகைமூட்டமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -யுவராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:20 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#53934

குப்பைகளை கிளறும் மாடுகள்

குப்பை

குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் மேல்பட்டி சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். அந்தக் குப்பைகளை மாடுகள் கிளறி விடுகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரம் மாடுகள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்குமார், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#53932

குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?

குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?குப்பை

ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் வண்டிமேடு பகுதியில் நகராட்சி கடைகள் மூடப்பட்டதால், அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அந்தப் பகுதியில் குப்பைக் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரண்ராஜ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:13 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#53931

விளை பொருட்கள் எடையில் முறைகேடு

மற்றவை

கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை அலுவலகத்தில் வியாபாரிகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் விளை பொருட்களின் எடையில் முறைகேடு செய்கிறார்கள். இதுகுறித்து கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.பெருமாள், நாரியமங்கலம், கேசவன், ராஜாதோப்பு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#53929

தேரை பாதுகாப்பார்களா?

தேரை பாதுகாப்பார்களா?மற்றவை

ஆரணிைய அடுத்த எஸ்.வி. நகரம் ஊராட்சியில் மாரியம்மன் கோவிலில் பழமையான தேர் பழுது ஏற்பட்டு ஓரம் கட்டப்பட்டுள்ளது. புதிய தேர் வந்தவுடன் பழைய தேரை வெயிலிலும், மழையிலும் வைத்து விட்டார்கள். தேரை பாதுகாக்க இந்து சமய அறநிலைத்துறையோ கோவில் நிர்வாகமோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோவிந்தன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick