Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Sep 2022 9:22 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#15419

குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்

குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்குப்பை

திருவண்ணாமலையில் கிரிவலம் என்பது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபத்தில் இருந்து அண்ணா நுழைவு வாயில் பகுதி வரை முறையாக குப்பைகள் அகற்றப்படாமல், அசுத்தமாக உள்ளது. கிரிவலத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கிரிவலப்பாதை அசுத்தமாக காட்சி அளிப்பதால் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:18 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#15415

வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

வாகனங்கள் ஏலம் விடப்படுமா?மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏராளமான வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதில் இருந்து விஷ பூச்சிகள் வெளியேறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு நீதி விசாரணை முடிந்ததும், அந்த வாகனங்களை போலீசார் ஏலத்தில் விடுவார்களா? -அப்துல்வஹாப், தூசி. 

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 9:14 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15412

ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் கட்ட வேண்டும்

கழிவுநீர்

வாணியம்பாடி-சேலம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக நகர்ப்புறங்களில் இருபுறங்களில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பத்தூர் பஸ் நிலைய பகுதியில் தற்போது கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகள் ஏதும் அகற்றாமல் அப்படியே கட்டப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும். -சண்முகம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 5:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15410

நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் அந்தப் பகுதியில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை கடிக்க பாய்கிறது. நாய்களை பிடிக்க வேண்டும், என நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நாய்களை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்பது பொதுமக்களை எதிர்பார்ப்பாக உள்ளது. -எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#15408

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் மெயின் ரோடு ஓரம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. நகராட்சி சார்பில் குப்பைகளை அள்ள தினமும் வண்டிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக குப்பை வண்டி வராததால் அந்த இடம் முழுவதும் குப்பை மேடாக காட்சியளித்து. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவும் நிலை உள்ளது. எனவே சாமியார் மடம் பகுதியில் சாலையோரம் தேங்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தினமும் அகற்ற வேண்டும். -சதீஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 4:53 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#15388

மதுபானக்கடைளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மற்றவை

குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு பின்பக்கம் தமிழக அரசின் எலைட் மதுபானக்கடை, டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் மாலையில் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபானப் பிரியர்கள் இரு சக்கர வாகனங்களை காமராஜர் பாலம் அருகே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக 2 மதுபானக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபுபாலாஜி, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 4:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#15383

சாலை பள்ளங்களை சரி செய்ய வேண்டும்

சாலை

ராணிப்பேட்டையில் இருந்து காரை கூட்ரோடு செல்லும் வழியில், இப்போதைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சாலையைச் சீா் செய்ய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்போது மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், ராணிப்பேட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்தச் சாலை வழியாகத்தான் இப்போது செல்கின்றன. இதனால் இச்சாலை வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் தனியார் பள்ளி ஒன்றும் இதன் அருகே அமைந்துள்ளதால், மாணவர்கள் இச்சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 4:02 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#15354

காங்கேயநல்லூர் கூட் ரோட்டில் தடுப்புகள் அகற்றப்படுமா?

காங்கேயநல்லூர் கூட் ரோட்டில் தடுப்புகள் அகற்றப்படுமா?சாலை

காட்பாடியில் விருதம்பட்டு-சில்க் மில்லுக்கு இடையே உள்ள பஸ் நிறுத்தமாக காங்கேயநல்லூர் கூட்ரோடு உள்ளது. இந்த வழியாகத்தான் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, அக்சீலியம் பள்ளி, கல்லூரி என பல பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்துப் போலீசார் கூட்ரோட்டில் இருந்த வழியை தடுப்புகளை கொண்டு அடைத்து விட்டனர். எனவே விருதம்பட்டில் இருந்து அனைவரும் சில்க்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 1:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15287

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பத்தூர் சாமி செட்டி தெருவில் 2 தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. அதில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், வாழை மரங்கள், குப்பைகள் அங்குள்ள தெருக்களில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 2 திருமண மண்டபங்களில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -சுரேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 1:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#15286

செல்போன் விழும் அளவுக்கு துவாரம்

செல்போன் விழும் அளவுக்கு துவாரம்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மீது 20-க்கும் மேற்பட்ட சிறு சிறு துவாரம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூடிகள் அமைக்கப்படாததால் செல்போன்கள், சாவிகள் விழுந்தால் எடுக்க முடியாத நிலை உள்ளது. துவாரம் மீது மூடி போட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்பாபு, முத்துமண்டபம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 1:24 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#15277

கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

வேலூர் மாநகராட்சியாக அறிவித்து 15 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தெருக்கள் பல உள்ளன. அதேபோல் மாநகராட்சி மண்டலம் 1-ல் வார்டு எண்: 1-ல் ராஜீவ்காந்தி நகர் 3-வது தெருவில் பல ஆண்டுகள் ஆகியும் கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 1:16 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#15275

சரிந்து விழும் நிலையில் மீட்டர் பெட்டி

சரிந்து விழும் நிலையில் மீட்டர் பெட்டிமின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள மு.வ. தெருவில் அப்பகுதி பொதுமக்கள் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனா். குடிநீர் தொட்டிக்கான மீட்டர் பெட்டி சேதமடைந்து சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வீரபத்திரன், பழைய ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick