Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Sep 2022 1:07 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#15268

பள்ளி சுவரில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

பள்ளி சுவரில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்மற்றவை

பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மதில் சுவற்றில் தேச தலைவர்களின் உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் அருகில் வாசங்கள் எழுதப்பட்டுள்ளது. அதன் மீது சுற்று வட்டாரப் பகுதியில் நடக்கும் திருவிழாக்கள், அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளின் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. பள்ளி சுவரில் சுவரொட்டிகள் ஒட்டுவதும், அதை மாணவர்கள் அகற்றுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பள்ளியின் மதில் சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமன், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 12:42 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#15252

செடி, கொடிகள் படர்ந்த மின் கம்பம்

செடி, கொடிகள் படர்ந்த மின் கம்பம்மின்சாரம்

சோளிங்கரை அடுத்த வெங்குப்பட்டு கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் கரும்புத் தோட்டம் ஒன்றில் மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து கம்பி வரை நீண்டுள்ளது. அதன் வழியாக மின் கசிவு ஏற்பட்டு கரும்புத்ேதாட்டம் தீப்பிடித்து எாிய வாய்ப்புள்ளது. தீ விபத்து ஏற்படுவதற்கு முன் மின் கம்பம், கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடிகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்ற வேண்டும். -கண்ணன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 12:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#15249

சாலை விரிவாக்கம் செய்தும் போக்குவரத்து நெரிசல்

சாலை

ஆற்காட்டில் உள்ள மாசாபேட்டை, வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் அப்பகுதியில் கடை நடத்தும் நபர்களின் கடைகளுக்கு முன்னால் கடைக்கு வரும் நபர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் சாலை விரிவாக்கம் செய்வதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மன்சூர்பாஷா. ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 12:36 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#15248

மேம்பாலங்களில் மண், குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பை

அரக்கோணம்-சோளிங்கர் ரோடு மற்றும் திருத்தணி ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலங்களில் மண் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது மண் துகள், குப்பைகள் பறந்து வந்து கண்களில் விழுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மேம்பாலங்களில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுவார்களா? -டில்லிபாபு, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 12:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#15247

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

ஆம்பூர் ஏ.கஸ்பா ரோட்டில் காதர்பேட்டை முதல் தெரு எதிரில் அதிகமான குப்பைகள் ரோட்டோரம் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -அல்மாஸ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 11:17 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#15225

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமம் அண்ணா தெருவில் சிறுமின்விசை தொட்டி உள்ளது. அதன் அருகில் குப்பைத்தொட்டியை வைத்துள்ளனர். அதில் அங்குள்ள மக்கள் குப்பைகளை எடுத்து வந்து கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றவில்லை. குப்பைகளால் தொட்டி நிரம்பி வழிகிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் முகம் சுளிக்கிறார்கள். குடிநீர் தொட்டி அருகிலேயே வைத்துள்ள குப்பைத்தொட்டியை சற்று தூரத்தில் வைக்க வேண்டும். இல்லையேல், தினமும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 3:06 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#15128

மின்விளக்குகள் எரியவில்லை

மின்விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

வந்தவாசி புதிய பஸ் நிலையம் செல்லும் பிரதான சாலையில் மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் இருட்டில் பயத்துடன் சென்று கொண்டிருக்கின்றனா். சம்பந்தப்பட்ட அதிகாாிகள் மின்விளக்குகளை எரியவிட வேண்டும். -குருலிங்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 2:37 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#15114

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்புபோக்குவரத்து

வாணியம்பாடி பைபாஸ் சாலையில் சென்னை-பெங்களூரு செல்லும் சாலையிலும் பெங்களூரு, சென்னை செல்லும் இரு வழி தடத்திலும் பைபாஸ் பகுதியில் ஆங்காங்கே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பொதுமக்கள் ஒரு புறம் சிரமம் அடைவதுடன், அப்பகுதிகளில் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ்படுகிறது. எனவே அத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் பஸ்களை ஒழுங்குப்படுத்தி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்துப் போலீசார் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரசு, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 2:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#15109

தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

திருப்பத்தூர் அருகே தர்மபுரி சாலையில் குனிச்சி கிராமம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற தலைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி பல மாதங்களாக நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் விபத்துகள் நடக்கிறது. எனவே பல மாதங்களாக நடந்து வரும் தரைப்பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 1:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#15046

3 மாதம் ஆகியும் சாலை அமைக்கவில்லை

3 மாதம் ஆகியும் சாலை அமைக்கவில்லைசாலை

வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2-ல் உள்ள 6-வது தெருவில் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி 3 மாதங்கள் ஆகிறது. பொதுமக்கள் நடக்க முடியாமலும், வாகனங்கள் ஓட்டும்போது தவறி விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதுவரை பலர் காயம் அடைந்துள்ளனர். சாலையை விரைவாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வினோத்குமார், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 11:57 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#15033

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

வேலூர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 16-வது வார்டில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு விரிசல் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 11:47 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#15032

செடி, கொடிகளை அகற்றுவார்களா?

செடி, கொடிகளை அகற்றுவார்களா?மற்றவை

அரக்கோணம் புதிய பஸ் நிலைய பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அசோக் நகர் செல்லும் வழியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. அங்குள்ள கழிப்பிட கட்டிடத்தை பயன்படுத்த முடியாத படி காடுபோல் காணப்படுகிறது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் நடமாடுவதால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick