Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Nov 2022 5:20 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#21217

வாரச்சந்தைக்கு மின் விளக்கு வசதி

மின்சாரம்

சோளிங்கரில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று வாரச்சந்தை நடக்கிறது. அங்கு ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு வருகின்றனர். வாரச்சந்தையில் மின் விளக்கு வசதி இல்லை. மேலும் கூடுதலாக மேற்கூரைகளும் இல்லை. மின் விளக்கு மற்றும் மேற்கூரை வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பகத்சிங், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 11:20 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21214

குடிநீர் வழங்க வேண்டும்

குடிநீர் வழங்க வேண்டும்தண்ணீர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாயில் மாதக்கணக்கில் தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்..

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 11:16 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#21212

பள்ளத்தால் ஆபத்து

பள்ளத்தால் ஆபத்துமற்றவை

கலவை பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் சிெமண்டு சிலாப்பு உடைந்து பல மாதங்களாக உள்ளது. இது, 10 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். சிறிய பள்ளமாக இருந்தது. தற்போது தொடர்ந்து பெரிய அளவில் பள்ளமாக மாறி விட்டது. அந்த வழியாக செல்லும் முதியோர், சிறுவர், சிறுமிகள் தவறி பள்ளத்தில் விழும் அவல நிலை உள்ளது. பஸ் நிலையம் அருகில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும். பெரிய ஆபத்து நடக்கும் முன் பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வேல்முருகன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:30 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#21206

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக அப்பகுதியில் பன்றி வளர்ப்போர் தங்களது பன்றிகளை வெண்குன்றம் ஏரி அருகே வளர்ப்பதால், அவை அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயிர்களை பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். வனத்துறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#21205

பாலம் அமைக்கும் பணிைய விரைந்து முடிக்க வேண்டும்

பாலம் அமைக்கும் பணிைய விரைந்து முடிக்க வேண்டும்சாலை

கண்ணமங்கலம்-படவேடு செல்லும் ரோட்டில் காளசமுத்திரம் கிராமத்தில் மந்தைவெளி பகுதியில் 2 சிறு பாலங்கள் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக அந்த வழியில் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல சிறிய மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சிறு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -ஜெயசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 11:01 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#21204

குறுகிய இடத்தில் செயல்படும் தபால் அலுவலகம்

குறுகிய இடத்தில் செயல்படும் தபால் அலுவலகம்மற்றவை

கண்ணமங்கலம் பகுதியில் தபால் அலுவலகம் ஆலஞ்சி குலாம் மொய்தீன் தெருவில் தனியாருக்கு சொந்தமான பழைய மாடிக்கட்டிடத்தில் செயல்படுகிறது. இந்தத் தபால் அலுவலகத்துக்கான விளம்பர பலகை சிதிலமடைந்துள்ளது. இதனால், தபால் அலுவலகம் எங்கே உள்ளது? என வாடிக்கையாளர்கள் தேடும் நிலை உள்ளது. பழுதடைந்த குறுகிய கட்டிடத்தில் செயல்படும் தபால் அலுவலகத்தை வேறு புதிய வாடகை கட்டிடத்தில் மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகர், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 5:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#21203

தனியார் வாகனங்களால் இடையூறு

போக்குவரத்து

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் இரவும், பகலும் பஸ் போக்குவரத்துக்கு இடையூராக அப்பகுதியில் தனியார் கார்கள், மினி லாரிகள், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதை தடை செய்யும் வகையில் பஸ் நிலைய வளாகத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இதற்கு நகராட்சியும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 10:55 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#21202

புதர்களை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டை கச்சாலன் தெருவில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் தெருவில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து காடுபோல் உள்ளது. அந்தப் பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் இரவில் செல்ல தயங்குகிறார்கள். உடனடியாக அடர்ந்த செடிகள், புதர்களை அகற்றி தெருவை தூய்மைப்படுத்த வேண்டும். -சாமிதுரை, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 2:25 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#21055

புதருக்கு நடுவே அடிபம்பு

புதருக்கு நடுவே அடிபம்புதண்ணீர்

திருப்பத்தூரை அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி ஆலமரத்து வட்டத்தில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த அடிபம்பு ஒன்று பழுதடைந்தது. அந்த அடிபம்பை பழுது நீக்கி சரி செய்யாததால், அதைச் சுற்றி புதர் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோ.யஸ்வந்த், லக்கிநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 2:18 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#21048

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள காவல் நிலைய வீதியில், பல இடங்களில் சாலை குண்டு குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைப்பார்களா? -உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 12:56 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#20996

குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்

குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்தண்ணீர்

மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள கிணற்றின் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகம் செய்யப்படும் கிணறு அசுத்தமாகக் காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிணறை சுத்தம் செய்து அதில் உள்ள பாசி உள்ளிட்ட குப்பைகளை அகற்றி கிணற்றுக்கு மூடி போட்டு பராமரிக்க வேண்டும். -ராஜன், மங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 12:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20995

வழியில் தோண்டப்பட்ட பள்ளம்

வழியில் தோண்டப்பட்ட பள்ளம்சாலை

திருப்பத்தூர் நகராட்சி 30-வது வார்டு பகுதிறில் சிவசக்தி நகர் உள்ளது. இப்பகுதியையொட்டி உள்ள புதுப்பேட்டை ரோடு ரெயில்வே தரைப் பாலத்தின் வழியாக ஏரி நீர் செல்வதை தடுப்பதற்காக சிவசக்தி நகர் வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் வழியை நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்லக்கூட வழி இல்லாமல் தவித்து வருகிறனர். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வழி இல்லாமல் நகராட்சியால் தோண்டப்பட்ட பள்ளத்தை தாண்டி செல்லும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick