Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Nov 2022 11:37 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21465

குடிநீா் தொட்டியை அகற்ற வேண்டும்

குடிநீா் தொட்டியை அகற்ற வேண்டும்தண்ணீர்

வேலூரை அடுத்த சித்தேரியில் ஆதிதிராவிடர் காலனியில் பஜனை கோவில் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆகிறது. தற்போது குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. குடிநீா் ெதாட்டி எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளதால் இதனை அகற்ற வேண்டும். தொட்டியால் எந்தப் பயன்பாடும் இல்லை. எனவே விபரீதம் ஏற்படும் முன் குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும். -ஆம்ஸ்ட்ராங், வேலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 11:30 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#21464

மோட்டார்சைக்கிள்களால் பயணிகளுக்கு இடையூறு

மோட்டார்சைக்கிள்களால் பயணிகளுக்கு இடையூறுமற்றவை

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அங்கு நின்று செல்கின்றன. நிழற்கூடம் முன்பு பயணிகள் வசதிக்காக உள்ள காலியிடத்தில் மோட்டார்சைக்கிள்கள் வழியை அடைத்து நிறுத்தப்பட்டுள்ளன. அந்த மோட்டார்சைக்கிள்கள் போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறு உள்ளது. போலீசார் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -குருமூர்த்தி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 5:38 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21463

குண்டும் குழியுமான சாலை

சாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகே குறிஞ்சி நகருக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையை குறிஞ்சி நகர் மக்கள் மட்டுமின்றி கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தச் சாலை மிகவும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்ேவாா் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. குறிப்பாக இரவில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விரைவில் அங்கு தாா் சாலை அமைக்க வேண்டும். -ஆல்பா்ட், வேலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 11:19 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#21462

இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்

இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பிரதான சாலையாக காவல் நிலைய சாலை உள்ளது. அந்தச் சாைலயில் பல அலுவலகங்கள் உள்ளன. அந்தச் சாலை திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தை சரியாக மூடாததால் குண்டும் குழியுமாக உள்ளது. அகலமாக இருந்த சாலை குறுகி விட்டது சாலையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு வழி சாலையாக உள்ள காவல் நிலைய சாலையை இருவழி சாலையாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#21452

பஸ்சில் ஆபத்தான பயணம்

பஸ்சில் ஆபத்தான பயணம்போக்குவரத்து

கண்ணமங்கலம் புதிய சாலை வழியாக வேலூர்-திருவண்ணாமலைக்கு பஸ்கள் அடிக்கடி சென்று வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட பஸ்கள் சரியான நேரத்தில் வராததால் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்போது பஸ்களில் இடமில்லாமல் பயணிகள் பயணம் செய்ய அவதிப்படுகின்றனர். இதனால் வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள் பஸ்சின் பின் பக்கமுள்ள ஏணியில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். மேலும் பலர் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். இதை, பஸ்சின் டிரைவர், கண்டக்டர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 5:11 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#21367

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலையின் நடுவே மின்கம்பம்மின்சாரம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் பள்ளி எதிரிலும், இரட்டைமலை சீனிவாசன்பேட்டை ஆகிய 2 இடங்களில் நடு ரோட்டில் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் அடிக்கடி அந்த மின்கம்பத்தில் மோதி விடுகின்றனர். கார் போன்ற வாகனங்கள் அடிக்கடி மின்கம்பத்தில் மோதி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை பிடுங்கி ஓரமாக அமைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 5:15 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#21363

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் செல்லும் சாலையில் உடைஞ்ச ஏரி கரையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மேல்முனையில் உடைந்து, அந்தரத்தில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். -கே.ஜி.சரவணன், ஒன்றிய கவுன்சிலர், குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 2:17 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21291

தார் சாலை அமைப்பது எப்போது?

சாலை

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெரு வழியாக செல்லும் சாலை ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்தது. அந்தச் சாலையை பொக்லைன் உதவியோடு பெயர்த்தெடுத்தனர். பெயர்த்தெடுத்த தார் சாலை கழிவுகளை அதே சாலையில் போட்டு ரோலர் மூலமாக அழுத்தி சமன் செய்துள்ளனர். தற்போது மழைப் பெய்து வருவதால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடக்க முடியாமல் உள்ளது. வாகனங்களும் செல்ல சிரமமாக உள்ளது. தார் சாலை அமைப்பது எப்போது? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பொதுமக்கள், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 12:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#21226

கழிவுநீரை அகற்றுவார்களா?

கழிவுநீரை அகற்றுவார்களா?கழிவுநீர்

திருப்பத்தூர் நகராட்சி 35-வது வார்டு கலைஞர் நகர் பகுதியில் 6 மாதமாக தெருக்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. கழிவுநீரை அகற்றுமாறு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில் ெகாசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுநரை அகற்ற நடவடிக்கை எடுக்குமா? -பிரவீன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 12:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#21224

சாலையை சீரமைப்பார்களா?

சாலை

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுவதால், கை கால் முறிவு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனுசாமி, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 12:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#21223

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 12:20 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#21221

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மற்றவை

துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் ஏரி உள்ளது. ஏரிக்கரையை ஆக்கிரமித்து குடிசைகள் போட்டுள்ளனர். விவசாயமும் செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முன் வர வேண்டும். -பொதுமக்கள், மல்லவாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick