Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Nov 2022 6:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#20994

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் இருந்து கஸ்பா பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் நேற்று பகலிலும் எரிந்து கொண்டிருந்தன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் மின் விளக்கை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும். -கண்ணன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 6:16 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#20979

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வந்தவாசியை அடுத்த அம்ைமயப்பட்டு கிராமத்தில் பக்ரி தர்கா தெருவுக்கு பின்பக்கம் விவசாய விளை நிலம் உள்ளது. அங்கு இரவில் கூட்டம் கூட்டமாக 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் வந்து வேளாண் விளை பயிரை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் நஷ்டமும் ஏற்படுகிறது. எனவே வனத்துறையினர் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஹாஜாமொய்தீன், பக்ரி தர்கா தெரு, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 12:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20976

புதர் மண்டி கிடக்கும் பொதுக்கழிப்பிடம்

புதர் மண்டி கிடக்கும் பொதுக்கழிப்பிடம்மற்றவை

வேலூர் கொணவட்டம் சதுப்பேரி ஏரி அருகே உள்ள தேவி நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அதனை சுற்றி முற்செடிகள் வளா்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பொதுக்கழிப்பிடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுக்கழிப்பிடத்தை சுற்றியுள்ள முற்செடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிட்டிபாபு, ெகாணவட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:48 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20975

டவுன் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்பதில்லை

டவுன் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்பதில்லைபோக்குவரத்து

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமங்களிலேயே பஸ்களில் கூட்டம் நிரம்பி விடுவதால், பஸ்கள் கண்ணமங்கலம் மற்றும் கூட்ரோடு பகுதியில் நிறுத்தத்தில் நிறுத்தாமல், மேற்கொண்டு பயணிகளை ஏற்றாமல் தவிர்ப்பதற்காக சற்று தூரத்தில் நிறுத்துகிறார்கள். இதனால் டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய காத்திருக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பும் அவலநிலை உள்ளது. மேலும் ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் தடம் எண்:214 என்ற பஸ் தற்போது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:45 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#20974

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மற்றவை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கட்டிடங்களுக்கு முன்பாக உள்ள சில கடைகள் 15 அடிக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். புதிய பஸ் நிலையம் திரும்பும் இடத்தில் உள்ள கடைகள் 10 அடிக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், தனியார் பள்ளி வாகன ஓட்டிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் சிரமப்படுகின்றனர். வாகனத்தை ஓட்டி செல்ல அவதிப்படுகின்றனர். பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. பேரூராட்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 6:20 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#20973

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

கே.வி.குப்பம் மேல்மாயில் ரோடு, கால்நடை மருத்துவமனை பக்கத்தில் உள்ள நடைபாதையின் அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. தேங்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். -ராஜாங்கம், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 6:21 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20972

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளை உண்டு வாழ்கின்றன. கால்வாய்களில் ஓட்டல் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், பன்றிகளை பிடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20971

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி ஜமாதி மலையடிவாரத்தில் சுகாதார வளாகம் புனரமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது. மேலும் இந்தப் பகுதியில் பொது இடங்களில் திறந்த வெளி கழிப்பிடமாக பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவானந்தம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 6:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20970

கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசு

மற்றவை

கண்ணமங்கலம் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் கரும்புகையை வெளியேற்றிய படி செல்கின்றன. போதிய பராமரிப்பின்றி வாகனங்கள் இயக்கப்படுவதால், கரும்புகை வெளியேறி சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. காற்று மாசை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும் கரும்புகை வெளியேறும் வாகனங்கள் மீது மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:30 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#20969

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

செங்கம் பேரூராட்சியில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஒரு சில நேரத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே ஓடுவதாலும், படுத்துக் ெகாள்வதாலும் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -சிவச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:17 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#20968

திறந்த வெளியில் வீசப்படும் எச்சில் இலைகள்

மற்றவை

வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள் முன்பு திறந்தவெளியில் சாலையோரம் மக்கள் நடந்து செல்ல நடைபாதையில் எச்சில் இலைகளை போட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் விபத்துகுள்ளாகிறார்கள். இதனால் நகராட்சி மண்டபங்கள் முன்பு எச்சில் இலைகளை வெளியே திறந்த வெளியில் வீசி எறிய தடை விதிக்க வேண்டும். -அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20967

ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்

ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்மற்றவை

பனப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தரை மற்றும் படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும்போது சிரமப்படுகிறார்கள். எனவே சேதம் அடைந்த பகுதியை உடனடியாக சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, அண்ணாநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick