- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டவுன் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்பதில்லை
வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமங்களிலேயே பஸ்களில் கூட்டம் நிரம்பி விடுவதால், பஸ்கள் கண்ணமங்கலம் மற்றும் கூட்ரோடு பகுதியில் நிறுத்தத்தில் நிறுத்தாமல், மேற்கொண்டு பயணிகளை ஏற்றாமல் தவிர்ப்பதற்காக சற்று தூரத்தில் நிறுத்துகிறார்கள். இதனால் டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய காத்திருக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பும் அவலநிலை உள்ளது. மேலும் ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் தடம் எண்:214 என்ற பஸ் தற்போது கண்ணமங்கலம் வரை கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கூட்ரோட்டில் விட்டு விடுகிறது. இங்கிருந்து டவுன் பஸ்கள் மூலம் இலவசமாக கல்லூரி மாணவ-மாணவிகள் பயணம் செய்யலாம். ஆனால் யாரும் பயணம் செய்ய முடியாமல் டிரைவர், கண்டக்டர்கள் மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லும் பணியை தவிர்க்கின்றனர். எனவே போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?
-தேவதாஸ், கண்ணமங்கலம்.