Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#26963

கிணற்றை தூர்வார வேண்டும்

கிணற்றை தூர்வார வேண்டும்தண்ணீர்

கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் சமுதாய கிணறு உள்ளது. அதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். அந்தக் கிணற்றில் இருந்து கிராம மக்களும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்தக் கிணறு பாழடைந்துள்ளது. அதன் அருகில் ஆலமரம் வளர்ந்துள்ளது. அந்தக் கிணற்றை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:51 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#26785

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் கன்னிகாபுரம் சாலையில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-கிருஷ்ணன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#26780

சிக்னல் விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் சிக்னல்கள் அமைக்கப்படவில்லை. இதனால் திருப்பத்தூரில் டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள இடத்தில் மற்றும் புதுப்பேட்டை ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் விளக்குகளை அமைத்துத் தருவார்களா?-மாது வழக்கறிஞர். ஆதியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#26775

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

ஜோலார்பேட்டை பகுதியில் புது ஓட்டல் தெருவில் செல்லும் சாலை குண்டு குழியுமாக இருப்பதாக படத்துடன் தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் நிலையத்துக்கு புது ஓட்டல் தெரு வழியாக செல்லும் சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26761

கால்வாய் அடைப்பு சரிசெய்யப்படுமா?

கால்வாய் அடைப்பு சரிசெய்யப்படுமா?கழிவுநீர்

வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே காவல் குடியிருப்பு எதிரே உள்ள சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரசேகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#26760

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்போக்குவரத்து

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டும், படியில் தொங்கி கொண்டும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். கே.வி.குப்பம் தாலுகாவில் அரசு போக்குவரத்துக்கழகம், கூடுதல் பஸ்களை இயக்கி மாணவர்களின் ஆபத்தான பயணத்தைத் தடுக்க வேண்டும்.-விஜயன், வடுகந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:29 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26759

மின்கம்பத்தில் படரும் கொடி

மின்கம்பத்தில் படரும் கொடிமின்சாரம்

வேலூர் பாகாயத்தில் சி.எம்.சி. மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தின் பின்பக்கம் உள்ள ஏரிக்கரை மீது மின்கம்பம் ஒன்றில் செடி, கொடிகள் படர்ந்து வருகிறது. இதனை அவ்வப்போது அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராமச்சந்திரன், பாகாயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26758

போதை இளைஞர்கள் அட்டகாசம்

போதை இளைஞர்கள் அட்டகாசம்மற்றவை

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாலை நேரங்களில் போதை பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மது மயக்கத்தில் தள்ளாடுகின்றனர். இதனால் குழந்தைகளும் பெண்களும் அச்சம் அடைகின்றனர். மதுபிரியர்களை கட்டுப்படுத்த போலீஸ் அதிகாரிகள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட ேவண்டும்.-சுப்புலட்சுமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26757

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

வேலூர் தொரப்பாடியில் கலெக்டர் பங்களா அருகில் மகளிர் பிற்காப்பு இல்லம் உள்ளது. அதன் வாசல் அருகே உள்ள இரட்டை மின்கம்பத்தில், சிமெண்டு பூச்சு உதிர்ந்து சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்பாபு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#26752

மருத்துவ கழிவுகளை வீசும் அவலம்

குப்பை

வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தனியார் மருத்துவ சிகிச்சை மையத்தில் பயன்படுத்தியப் பின் வீசப்படும் மருத்துவக் கழிவுகளை அடையாளம் தெரியாதவர்கள் சேகரித்து எடுத்து வந்து பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. உடனடியாக வாலாஜா நகராட்சி நிர்வாகம் மருத்துவக் கழிவுகளை வீசுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிரிதரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#26750

ரெயில் நிலையத்தில் சமூக விரோத செயல்

ரெயில் நிலையத்தில் சமூக விரோத செயல்மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பயண டிக்கெட் வழங்கும் கட்டிடத்தின் முன்பு மாலை நேரத்தில் மூடிய பிறகு இருள் சூழ்ந்ததும் சமூக விரோதிகள் சிலர் பயணிகள் செல்லும் வழியிலேயே அமர்ந்து மதுபானம் குடிக்கின்றனர். பின்னர் காலி பாட்டில்கள், மற்ற பொருட்களை அங்கேயே போட்டுச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியாக பெண்கள், குழந்தைகளுடன் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வடக்குப் பகுதியில் நிரந்தரமாக ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட ரெயில்வே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#26746

கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்படுமா?

கழிவுநீர்

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் பின்பக்கம் அனந்தலை கிராம எல்லைக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் இதுவரை கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் தெருக்களிலேயே கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு, கொசு உற்பத்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கால்வாய்கள் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-சேகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick