Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 March 2025 7:29 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54844

ராணிப்பேட்டை பைபாசில் பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

சென்னை, வேலூரில் இருந்து வரும் பஸ்களில் பயணிகள் ராணிப்பேட்டைக்கு டிக்கெட் கேட்டால் ‘‘அங்கு ஸ்டேஜ் கிடையாது, வாலாஜா டோல்கேட் அல்லது ஆற்காடு பைபாசில் மட்டுமே பஸ் நிற்கும்’’ எனக் கண்டக்டர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே இரவில் குடும்பத்துடன் வருபவர்கள் வாலாஜா டோல்கேட் பகுதியில் இறங்கி அங்கிருந்து ராணிப்பேட்டைக்கு ஆட்டோ மூலம் செல்ல வேண்டி உள்ளது. அரசு விரைவுப் பஸ்கள் ராணிப்பேட்டை நகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ராணிப்பேட்டை பைபாஸ் ரோடு பகுதியில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?...

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:25 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54843

குடிநீர் இணைப்பு வழங்குவார்களா?

தண்ணீர்

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரம் பகுதியில் உள்ள வாசுகி நகரில் 50 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியிருப்ப வர்கள் குடிநீர் தேவைக்கு கேன் வாட்டர் பயன்படுத்தும் நிலை உள்ளது. குடிநீர் இணைப்பு வேண்டி பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவார்களா? -எம்.மோகன், காவேரிப்பாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:15 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#54841

சாலை விரிவுப்படுத்தப்படுமா?

சாலை

வந்தவாசி ஐந்துகண் பாலத்தில் இருந்து சேத்துப்பட்டு சாலை கீழ்சாந்தமங்கலம் கூட்ரோடு வரை இருபக்கமும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையை சற்று விரிவுப்படுத்தினால் விபத்து தடுக்கப்படும். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ம.ம.பழனி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:14 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#54840

அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

தேசூர் அருகே மகமாயி திருமணி பெரிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு சேத்துப்பட்டு, வயலூர், தேசூர் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட வேண்டும். இதனால் மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பவானி, தேசூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:12 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#54839

ரேஷன் கடையை திறப்பார்களா?

மற்றவை

கீழ்பென்னாத்தூர் கூட்டுறவு சங்கம் மூலம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு கடைக்கு 700 குடும்ப அட்டைகளும், 2-வது கடைக்கு 1,600 குடும்ப அட்டைகளும் உள்ளன. இந்த நிலையில் 3-வதாக ஒரு ரேஷன் கடை கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் 2 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த ரேஷன் கடையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். -எஸ்.ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:09 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#54838

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

மற்றவை

செங்கம் டவுன் ஜீவானந்தம் தெருவில் தொடங்கி ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, துர்கையம்மன் கோவில் தெரு வழியாக உள்ள மிகக் குறுகலான தெருக்களில் சவ ஊர்வலங்கள் செல்கின்றன. அப்போது அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், மின்சாதனப் பொருட்கள் உடைகின்றன. கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சவ ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம்குமார், செங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:07 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#54837

காரிய மண்டபம் தேவை

மற்றவை

வந்தவாசி தாலுகா தேசூர் பேரூராட்சியில் இறந்தவர்களுக்கு காரிய செய்ய கட்டிட வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காரிய மண்டபம் ஒன்றை கட்டித்தர வேண்டும். -ம.ரவி, முன்னாள் கவுன்சிலர், தேசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54836

பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தரப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளன. எங்கள் கிராமத்தில் பஸ் பயணிகள் நிழற்கூட வசதி இல்லை. மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணதாசன், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:21 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#54678

பள்ளி சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்

மற்றவை

ஒடுகத்தூர்-மாதனூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அகரம் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அந்தச் சுற்றுச்சுவர் ஓரத்தில் இருந்த 4 புளியமரங்களை ரசாயனத்தை ஊற்றி பட்டுப்போக செய்து விட்டனர். பள்ளியில் இருந்து வெளியேறும் மழைநீர் செல்லும் நெடுஞ்சாலைக்கு குறுக்கே உள்ள சிறு பாலத்தை மண் கொட்டி அடைத்து விட்டார்கள். இதனால் பள்ளியிலேயே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.கே.லட்சுமணன், அகரம்.

மேலும்
ஆதரவு: 35
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54677

தூர்வாரப்படாத கால்வாய்கள்

கழிவுநீர்

வேலூர் தோட்டப்பாளையத்தில் பெரும்பாலான தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அந்தக் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் உள்ளது. அந்தக் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரெங்கநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:16 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54676

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்

கழிவுநீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் குளக்கரை பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க கோரி நகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:13 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54675

பஸ் நிலையத்தில் இருக்கை வசதி

மற்றவை

வாலாஜாவில் புதிதாகக் கட்டப்பட்ட பஸ் நிலைய வளாகப் பகுதியில் பஸ்சுக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அமருவதற்கு நாற்காலி வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கை வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick