Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 April 2023 3:31 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#30156

அலுவலக இடமாற்றத்தை தடுக்க வேண்டும்

அலுவலக இடமாற்றத்தை தடுக்க வேண்டும்மற்றவை

குடியாத்தத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், மேல்பட்டி சாலை செருவங்கியில் இயங்கி வருகிறது. சுற்று வட்டாரப் பொதுமக்கள், சின்னவரிகம், பேரணாம்பட்டு, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து செல்ல வசதியாக உள்ளது. இதை, 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்கத்துக்கு இடமாற்றம் செய்ய உள்ளனர். பலருக்கும் சிரமத்தைத் தரும் இந்த இடமாற்றத்தைத் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.-ராமானுஜன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 3:29 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#30155

ஆக்கிரமிப்பை அகற்றாமல் கால்வாய் கட்டும் பணியா?

ஆக்கிரமிப்பை அகற்றாமல் கால்வாய் கட்டும் பணியா?கழிவுநீர்

வேலூர் மாநகராட்சி 39-வது வார்டு சாதுகார மடத்தெரு 1-ல் கடந்த பிப்ரவரி மாதம் கால்வாய் கட்டும் பணி நடந்தது. அப்போது அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வந்து சர்வே செய்தபோது, ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் ஒரு மாதத்துக்கு பிறகு அதே இடத்தில் கால்வாய் கட்டும் பணி நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், சாதுகார மடத்தெரு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 3:25 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#30153

உயர் கோபுர மின் விளக்குகள் பழுது

உயர் கோபுர மின் விளக்குகள் பழுதுதண்ணீர்

குடியாத்தம் நேதாஜி சவுக் பஸ் நிறுத்தத்தில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் 10-ல் 6 மின் விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மீதி உள்ள 4 மின் விளக்குகள் பழுதாகி உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அப்பகுதியில் அனைத்து விளக்குகளும் எரிந்தால் தான் வெளிச்சம் இருக்கும். பழுதான மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை பொருத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 3:23 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#30151

பகலில் எரியும் மின்விளக்கு

பகலில் எரியும் மின்விளக்குமின்சாரம்

பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 2-ல் உள்ள தெரு மின் விளக்குகள் பகல் நேரத்திலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. நகராட்சி நிர்வாகம் பகலில் எரியும் மின் விளக்கை அணைக்க வேண்டும்.-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 3:21 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#30149

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

பேரணாம்பட்டு சந்தாகுட்டை பகுதியில் இருந்து ரஹமதாபாத் செல்லும் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் நிறைந்து கழிவுநீரை ஓடவிடாமல் தடுக்கின்றன. எனவே கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தடையின்றி ஓட வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 5:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30014

மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு குல்லாச்சாரிவட்டம் பகுதியில் உள்ள தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதுபற்றி பலமுறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக புதிய மின்விளக்குகளை பொருத்தி எரியவிட வேண்டும்.-மு.வெற்றிகொண்டான், கவுன்சிலர், திருப்பத்தூர் நகராட்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30012

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பத்தூரில் இருந்து ஆதியூர் வழியாக எலவம்பட்டியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்த வழியில் அரசு பள்ளி உள்ளது. மேலும் அந்தச் சாைல பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. அந்தச் சாலையை கிராம அபிவிருத்தி சாலை திட்டத்தில் உடனடியாக புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#30009

தண்ணீர் வினியோகம் செய்யவில்லை

தண்ணீர் வினியோகம் செய்யவில்லைதண்ணீர்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள பாதர் கெசு ரோட்டில் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின் விசை தொட்டி அமைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கடந்த ஒரு வருடமாக சிறு மின்விசை தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்வதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொது மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30007

பாலம் அமைக்கும் பணி தொடங்குமா?

மற்றவை

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சாலையில் சிறு பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் அந்த வழியே வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு ஒரே வழியில் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. பள்ளம் தோண்டி 25 நாட்களை கடந்தும் இன்னும் பணிகள் தொடங்கவே இல்லை. இதனால் அந்த இடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பாலம் கட்டும் பணியை உடனே தொடங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.-கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#30005

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் வாத்திமனை பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அக்கீம், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#29996

காரியமேடை கட்டிடம் பழுது

காரியமேடை கட்டிடம் பழுதுமற்றவை

ராணிப்பேட்டை நகராட்சி காரை பகுதியில் காரியமேடை கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடம் கட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. அந்தக் கட்டிடம் பழுதடைந்துள்ளது. மேற்கூரை, தரைதளம் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் மழைநீர் உள்ளே கசியும். அந்தக் கட்டிடத்தை சீரமைத்துத்தர அதிகாரிகள் முன் வருவார்களா?-த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#29995

நாய்கள் தொல்லை

மற்றவை

அரக்கோணம் நாகாலம்மன்நகர் பகுதி ஜி.கே.என். நகரில் இருந்து வாணியம்பேட்டை செல்லும் பிரதான சாலையில் வீடுகள் இருக்கும் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ரோட்டில் வந்து செல்வோரை துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வந்து ெசல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick