Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 March 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#29990

ஏரியில் வீசப்படும் குப்பைகள்

ஏரியில் வீசப்படும் குப்பைகள்குப்பை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி ஏரிக்கரை ஓரம் முழுவதும் குப்பைகளை கொட்டி உள்ளனர். குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை அகற்ற பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுநாள் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரி மாசுபடுவதால் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#29987

நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

வந்தவாசி-திருவண்ணாமலை தேசூர் வழியாக வந்தவாசி 2-வது பணிமனைக்கு சொந்தமான தடம் எண்:144 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ்சை தற்போது நிறுத்தி விட்டார்கள். அதேபோல வந்தவாசி 1-வது பணிமனைக்கு சொந்தமான தடம் எண்:141 என்ற பஸ் தேசூர்-செஞ்சிக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ்சையும் நிறுத்தி விட்டார்கள். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எமரேசன், தேசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#29983

உயர் கோபுர மின் விளக்கு எரியுமா?

உயர் கோபுர மின் விளக்கு எரியுமா?மின்சாரம்

கண்ணமங்கலம் பேரூராட்சி பஸ் நிலையத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.-தர்ஷன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#29982

குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட வேண்டும்

குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட வேண்டும்குப்பை

ஆரணி கொசப்பாளையம் மைதானத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வந்து ஒரே இடத்தில் கொட்டுகிறார்கள். குப்பைகளை உடனடியாக அகற்றாததால் மாடுகள், நாய்கள், பன்றிகள் வந்து கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறக்கின்றன. குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அப்துல்சாஹிப், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#29981

கழிவறை முன் வாகனங்களை நிறுத்துவதால் அவதி

கழிவறை முன் வாகனங்களை நிறுத்துவதால் அவதிமற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. ஆனால் தற்போது அந்த இடத்தில் குறிப்பாக கழிவறை முன்பு சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கழிவறைக்கு நேர் எதிரே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் கழிவறை செல்லும் நபர்கள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்துமிடம் தனியாக அமைக்க வேண்டும்.-ஜெகன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:26 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#29979

இருக்கை வசதி தேவை

மற்றவை

திருவண்ணாமலை நகரம் பெரியார் சிலை பஸ் பயணிகள் நிழற்குடையில் போதிய இருக்கைகள் வசதி இல்லை. மேலும் பயணிகள் செல்போனுக்கு சார்ஜ் போட மின்சார வசதிைய அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும். -ஆர்.முத்துமாணிக்கம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:06 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#29960

குழாயில் உடைப்பு

குழாயில் உடைப்புதண்ணீர்

ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து இ.பி. நகர் செல்லும் சாலையில் சேவூர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட புதிய குழாய் இணைப்பு பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. பள்ளமான இடத்தில் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.-ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:01 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#29958

ஆபத்தான மரம் அகற்றப்படுமா?

ஆபத்தான மரம் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே சாலையோரம் பட்டுப்போன பெரிய மரம் ஒன்று ஆபத்தான நிலையில் நிற்கிறது. காற்று அடிக்கும்போது அந்த மரத்தில் இருந்து கிளை முறிந்து கீழே விழுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 3:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29957

உடைந்து விழுந்த தடுப்பு கம்பிகள்

உடைந்து விழுந்த தடுப்பு கம்பிகள்சாலை

வேலூர் கோட்டை சுற்றுச் சாலை காவலர் மண்டபம் அருகே சாலை ஓரத்தில் நடைபாதை தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பணிகள் முடிந்த சில மாதங்களில் தடுப்புக்கம்பிகள் உடைந்து சரிந்து கிடக்கின்றன. கம்பிகளை உறுதியாக அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா?-மார்கபந்து, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 3:57 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29956

பட்ட மரம் அகற்றப்படுமா?

பட்ட மரம் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் பட்டுப்போன மரம் ஒன்று ஆபத்தான நிலையில் நிற்கிறது. அருகருகே மின் கம்பங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. சூறைக்காற்றால் மரம் சரிந்து விழும் முன்பு, பாதுகாப்பாக மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமய்யன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 3:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29955

மாசுபடும் அகழி தண்ணீர்

மாசுபடும் அகழி தண்ணீர்தண்ணீர்

வேலூர் கோட்டைக்கு வரும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் காலி தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகழியில் வீசுகின்றனர். இது, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால், அகழியில் உள்ள சிறு சிறு மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீர் மாசு படுகிறது. அகழி தண்ணீரில் குப்பை வீசுவதை தடுக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 3:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29953

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே நாக தேவதை அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நடைபாதையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி சாலை ஓரம் தேங்கி நிற்கிறது. அங்கு தண்ணீர் தேங்குவதால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணிசங்கர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick