29 March 2023 4:28 PM GMT
#29981
கழிவறை முன் வாகனங்களை நிறுத்துவதால் அவதி
கண்ணமங்கலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. ஆனால் தற்போது அந்த இடத்தில் குறிப்பாக கழிவறை முன்பு சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கழிவறைக்கு நேர் எதிரே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் கழிவறை செல்லும் நபர்கள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்துமிடம் தனியாக அமைக்க வேண்டும்.
-ஜெகன், கண்ணமங்கலம்.