Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 May 2023 4:01 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#33692

வீணாக வெளியேறும் குடிநீர்

வீணாக வெளியேறும் குடிநீர்தண்ணீர்

பேரணாம்பட்டு நகராட்சி அருகில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து 5 மாதமாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அந்தக் குடிநீர் சாலையோரம் வழிந்து கொண்டிருப்பதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலர் தகவல் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வார்களா?-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:56 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#33690

சுவரில் வளர்ந்த செடிகள்

சுவரில் வளர்ந்த செடிகள்மற்றவை

குடியாத்தம் தென்குளக்கரை ராபின்சன் குளம் அருகில் உள்ள நகராட்சி கடைகளின் மேல்புறத்தில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டிட சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசமரச் செடிகளை அகற்ற வேண்டும்.-ராஜா, குடியாத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:54 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#33688

இரவில் விரைவு பஸ்கள் போளூருக்குள் வருவது இல்லை

போக்குவரத்து

போளூரில் இரவு 10 மணிக்கு மேல் விரைவு பஸ் அனைத்தும் போளூர் பஸ் நிலையத்தின் உள்ளே வருவது இல்லை. பைபாஸ் சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் போளூர் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்துப் பணிமனையில் எத்தனை முறை புகார் அளித்தாலும் பணிமனை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே இரவு நேரங்களில் விரைவு பஸ்கள் அனைத்தும் போளூருக்கு உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமகிருஷ்ணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:52 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#33687

மின்விசிறி இயங்குமா?

மின்விசிறி இயங்குமா?மற்றவை

வந்தவாசி நகர மன்றக் கூட்டம் நடக்கும் ஹாலில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் நீண்ட நாட்களாக மின்விசிறி இயங்காமல் உள்ளது. இதனால் பார்வையாளர்கள் வருவது குறைந்துவிட்டது. மேலும் அந்த மின்விசிறி எந்த ேநரத்திலும் கழன்று தலையில் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பல முறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?-விநாயகமூர்த்தி. வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:50 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#33686

அகற்றப்படாத குப்பைகள்

அகற்றப்படாத குப்பைகள்குப்பை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே மழைநீர் வடிகால் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயில் சூப்பிரண்டு அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் பொதுமக்களும் அங்கு சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மனுக்கள் கொடுக்கும் வரும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள மரத்தடியின் கீழ் அமர்கின்றனர். அதில் பிளாஸ்டிக் குப்பைகளை அதிகமாக உள்ளது. குப்பைகள் குவிந்து காணப்படுவதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#33685

தடையை மீறி வைக்கப்படும் பேனர்கள்

தடையை மீறி வைக்கப்படும் பேனர்கள்மற்றவை

கண்ணமங்கலம் பகுதியில் பஸ் நிலையம், ஆற்றுப்பாலம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தடையை மீறி விளம்பர பேனர்களை வைக்கும் நபர்களை பேரூராட்சி நிர்வாகம் அடையாளம் கண்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.-சுப்பையா, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:45 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#33684

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

மற்றவை

தேசூர் அருகே மகமாய் திருமணி பெரிய கிராமம். அதன் அருகில் கெங்கம்பூண்டி, மாந்தாங்கல் ஆகிய கிராமங்கள் உள்ளன. கருவுற்ற தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். எனவே அனைவரும் பயன்படும் வகையில் மகமாய் திருமணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடக்க வேண்டும்.-கிராம மக்கள், மகமாய் திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#33521

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆற்காடு அண்ணா சிலை, கண்ணமங்கலம் கூட்ரோடு, மாசா பேட்டை ஆகிய பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகுந்த அச்சப்படுகின்றனர். மேலும் வெயில் காலம் என்பதால் நாய் கடித்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-வெங்கடகிஷோர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#33515

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் முகமதுபுறா பகுதியில் உள்ள தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-அகமத், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33512

தேங்கிய மழைநீரால் சுகாதார சீர்கேடு

தேங்கிய மழைநீரால் சுகாதார சீர்கேடுதண்ணீர்

ஜோலார்பேட்டை பக்கிரிதக்கா அருகே ரெயில்வே தரைப்பாலத்தில் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. இந்தத் தரைப்பாலத்தில் மழைநீர் நீண்ட காலமாக குளம் போல் தேங்கி உள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி விட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.-சம்பத், பூக்கடை, புது ஓட்டல் தெரு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#33506

சாலை தடுப்புகளை அகற்றும் பொதுமக்கள்

சாலை

வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் இரும்புத்தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் அந்தந்த ஊர் கிராமத்துக்குச் செல்வதற்காக சாலையில் இருந்த இரும்புத்தடுப்புகளை சிலர் அகற்றி வழி ஏற்படுத்தி உள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அந்தப் பகுதிகளில் வழிகளை அடைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#33503

சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா?

சாலை

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மழைநீர், கழிவுநீர் வெளியேற கால்வாய் மற்றும் சிறுபாலங்கள் கட்டுப்பட்டு வருகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி ஒரு பக்க சாலையில் மட்டுமே முடிந்துள்ளது. மறுபக்க சாலை பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் திருப்பத்தூரில் இருந்து வேலூர், சென்னை செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. உடனடியாக சிறுபாலங்கள் கட்டும் பணியை முடித்து போக்குவரத்தை சரி செய்வார்களா?-ராஜேஷ்குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick