Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 May 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#33501

கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

கால்வாய்களை சீரமைக்க வேண்டும்கழிவுநீர்

வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாக இல்லாததால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நேரத்தில் இந்த இடங்களில் மாணவர்கள் சிறிய படகு அமைத்து தள்ளிச் செல்லும் நிலை உள்ளது. எனவே கால்வாய்களை முறையாகச் சீரமைத்து தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.-அக்பர் பாஷா, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33496

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வாலாஜாபேட்டை நகரில் லாலாபேட்டை தெத்து தெருவில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் தினமும் சுகாதாரப் பணிகள் நடப்பது இல்லை. கால்வாய்களை தூர்வாருவது இல்லை. எங்குப் பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் கால்வாய்களை தூர்வார வேண்டும்.-அழகர்சாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#33495

பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்மற்றவை

நெமிலி தாலுகா ஓச்சேரி மற்றும் கீழ்வீதி கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அரசின் நல உதவி கேட்டு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். விவசாயிகளும் பட்டா, சிட்டா பெறமுடியாமல் தவிக்கின்றனர். மேற்கண்ட கிராமங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நல உதவிகளை தங்கு தடையின்றி பெற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களை திறக்க வேண்டும்.-மோகன்ராஜ், ஓச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#33490

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

தடம் எண்:487 என்ற பஸ் அரக்கோணம் பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மற்றும் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு வேலூர் வரை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு அந்தப் பஸ் இயக்கப்படவில்லை. எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பி.சரண்குமார், போளிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33487

கற்களால் முட்டு கொடுக்கப்பட்ட மின்கம்பம்

கற்களால் முட்டு கொடுக்கப்பட்ட மின்கம்பம்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் கிணறு அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் சரியும் நிலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கற்களால் முட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தெருவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடியும் முன்பு, மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-முத்துக்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33485

பெங்களூரு சாலையின் அவல நிலை

பெங்களூரு சாலையின் அவல நிலைசாலை

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மக்கான் சிக்னல் பகுதியில் இருந்து சி.எம்.சி. செல்லும் பழைய பெங்களூரு சாலை ஓரத்தில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அடைப்பு சரிசெய்யப்படாத காரணத்தால் நடக்கவும் முடியாமல், கடைகளை திறக்கவும் முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கால்வாய் அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அப்துல்சலாம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#33481

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் சோழவரம் ஆதிதிராவிடர் காலனியில் அமிர்தி சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் நடக்கிறது. எனவே விபத்துகளை தடுக்க எங்கள் பகுதியில் அமிர்தி சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும்.-த.அரவிந்தன், சோழவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33480

சேதமடைந்த மாநகராட்சி வாகனம்

சேதமடைந்த மாநகராட்சி வாகனம்மற்றவை

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் கிருமி நாசினி தெளிக்கும் வாகனம் உள்ளது. அந்த வாகனத்தின் அடிப்பாகம் முற்றிலும் சேதமடைந்து உள்பகுதியில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் மேல் பகுதியில் உள்ள மின்மோட்டார் விழும் அபாயத்தில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் வாகனத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அன்புச்ெசல்வன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33479

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அடைப்பு மற்றும் தூர்ந்துபோய் உள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையோரம் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலை ஓரமாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் தேங்கும் கழிவுநீரை அகற்றவும், கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சேதுமாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 4:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33478

தரைக்கடை மார்க்கெட்டாக மாறும் புதிய பஸ்நிலையம்

தரைக்கடை மார்க்கெட்டாக மாறும் புதிய பஸ்நிலையம்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் இன்னும் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால், பஸ்நிலைய வளாகம் தரைக்கடை மார்க்கெட் போல் மாறி வருகிறது. தள்ளுவண்டி, சைக்கிள்கள் மூலம் சிறு வியாபாரிகள் இதனை ஆக்கிரமித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.-ரமேஷ், முத்துமண்டபம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 1:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#33407

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு அச்சரப்பாக்கம் ரோட்டில் சிறு மின்விைச தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு உள்ளது. அந்தத் தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீர் வழிந்து வீணாக வெளியேறுவதால் அப்பகுதியில் சேறும் சகதியுமாக உள்ளது. குடிநீர் தொட்டி அருகில் குப்பைகளை கொட்டி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு நகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை சேகரிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, குடிநீர் தொட்டி பகுதிைய சுத்தமாக ைவத்திருக்க வேண்டும்.-ஸ்டவ் சீனிவாசன், 11-வது வார்டு வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 1:34 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#33406

மண்ணை அகற்ற வேண்டும்

மண்ணை அகற்ற வேண்டும்சாலை

செய்யாறு-காஞ்சீபுரம் சாலையில் கிளியத்தூர் கிராம பகுதியில் சாலை ஓரம் இணையதள கேபிள் புதைக்கும் பணி நடந்தது. அதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் மண்ணை முழுமையாக அகற்றாமல் விட்டுள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையோரம் இரவில் ஒளிரும் எச்சரிக்கை ஒளிப்பான்களை மண்ணை கொட்டி மூடி விட்டதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரம் சிதறி கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முகுந்தன், செய்யாறு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick