Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 May 2023 1:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#33405

பஸ் பயணிகளுக்கான நிழற்கூடம் தேவை

போக்குவரத்து

கண்ணமங்கலத்தில் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்கூடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். தற்போது பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் வேலூர், திருவண்ணாமலை செல்லும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. பயணிகள் மழை, வெயிலில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்ணமங்கலம் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைத்துத்தர வேண்டும்.-சுரேஷ்கண்ணன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 1:33 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#33404

பயணிகள் நிழற்குடை வேண்டும்

போக்குவரத்து

தேசூர் அருகே மகமாய் திருமணி கூட்ரோட்டில் பஸ் நிறுத்த நிழற்கூடம் இல்லை. திடீர் மழை வந்தால் ஒதுங்குக்கூட இடமில்லை. பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.-மண்ணுசுருட்டை, மகமாய்திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#33403

பேனர்களை அகற்றுவார்களா?

மற்றவை

திருவண்ணாமலை நகரத்தில் வேங்கிக்கால் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறுாக தனியார் பள்ளிகளின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பேனர்களை அகற்ற வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளின் பஸ்கள் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தப் பஸ்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தி வைக்க போலீசார் அறிவுறுத்தி தடுக்க வேண்டும்.-ராம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:18 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33244

தார் சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வாலாஜா ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தெரு மாரியம்மன் கோவில் எதிரில் ஏரிக்கரை வழியாகச் செல்லும் ராமாபுரம் மற்றும் அருந்ததிபாளையம், ஈச்சம்தாங்கல், குப்பத்துமோட்டூர், பாகவெளி, சுமைதாங்கி மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையை அடையும் தார் சாலை, வள்ளும்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தெரு மாரியம்மன் கோவில் எதிரில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக பெய்த மழையின்போது உடைக்கப்பட்டு, இது நாள் வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் உள்ளது. கிராம மக்கள் சாலையை கடக்க வேண்டும் என்றால் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#33241

குடிநீர் வினியோகம் செய்வார்களா?

குடிநீர் வினியோகம் செய்வார்களா?தண்ணீர்

கலவை-திமிரி செல்லும் சாலையில் ஒத்தவாடை வீதி அருகே பல மாதங்களாக சிறுமின்விசை தொட்டி தண்ணீர் இல்லாமல் வெறும் காட்சி பொருளாக உள்ளது. அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அகரம் ஊராட்சி செயலாளரிடம் கூறியும் எந்த விதமான பதிலும் இல்லை. ஆகவே உடனடியாக இந்தச் சிறுமின்விசை ெதாட்டி அருகே உள்ள குப்பைகளை அகற்றி, தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய ஒத்தவாடை வீதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.-குமார், வெள்ளைதேவன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:06 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#33234

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனை, இதர பணிகளுக்காகவும் வருபவர்கள் போக்குவரத்துக்கு நெரிசலால் இடையூறு ஏற்படுகிறது. இதனால் இந்தப் பகுதியை கடந்து செல்ல மாணவர்களும், முதியோர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் இருவேளையும் நெரிசலை தவிர்க்க போலீசார் பணியில் ஈடுபட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேஷ்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 1:55 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#33227

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுசாலை

அரக்கோணம் சுவால்பேட்டையில் பிரதான சாலையான திருத்தணி ரோடு மற்றும் மேற்கு ஒப்பணக்கார தெரு ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்பு கேபிள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு பள்ளத்தை மூடாமல் இருப்பது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.-ராஜாமணி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 1:44 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33219

சாலை மூடல்

சாலை மூடல்சாலை

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் நாட்டறம்பள்ளி ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிக்கு செல்லும் சாலையில் திடிரென சாலை மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தேசிய நெடுஞ்சாலை தரைப்பாலத்தில் சாலை மூடப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும்பொது மக்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூடப்பட்ட சாலையில் குவித்து வைக்கப்பட்ட உள்ள மண்ணை உடனடியாக அகற்றி சாலையில் வாகன ஓட்டிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 1:36 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33212

குப்பைகளை எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள்

குப்பை

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை ஊராட்சி பணியாளர்களே தீயிட்டு எரிக்கின்றனர். மேலும் குப்பைகளை அங்குள்ள கால்வாயில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை எரிக்கும் போது புகை மண்டலமாக காட்சியளித்து, அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை கொட்டி எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-கவுதம், துரைநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 1:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#33210

பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள்

போக்குவரத்து

திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் அங்குள்ள கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்.-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 1:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#33209

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் இருக்கும் சாலை மிகவும் மோசமாக மேடு பள்ளமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-நசீர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:02 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#33208

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 8-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும்.-எஸ்.அப்துல்பாஷா, சமூக ஆர்வலர், மாதனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick