Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 May 2023 12:40 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#33202

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

வந்தவாசியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான பஜார் வீதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வழியாக எந்த நேரத்தில் சென்றாலும் வாகன நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. போக்குவரத்துப் பாதிப்பு குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தாலும், அதை சரி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. பஜார் வீதியில் காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். -குருலிங்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#33200

புதிய மின்கம்பம் நடப்படுமா?

புதிய மின்கம்பம் நடப்படுமா?மின்சாரம்

கண்ணமங்கலம் பகுதியில் பல்வேறு தெருக்கள் குறுகலாக உள்ளன. அதில் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் கோவில் அருகில் உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில், அந்தக் கம்பத்தை மாற்றாமல் மின் வாரியத்துறையினர் பழுதடைந்த கம்பத்துக்கு கான்கிரீட் கலவை பூச்சு செய்தனர். அந்தத் தெரு மிகக் குறுகிய தெருவாக இருப்பதால், புதிய மின் கம்பம் நடப்படுமா?-தாமோதரன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#33198

மின் விளக்குகள் எரியவில்லை

மின் விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

வந்தவாசி நகராட்சி கட்டுப்பாட்டில் புதிய பஸ் நிலையம் உள்ளது. அது, கலைஞர் புதிய பஸ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். பஸ் நிலையம் முழுவதும் மின்விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ் நிலையம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகளும் சரியாக எரியவில்லை. இதனால் பல குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பயணிகளும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:35 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#33196

டவுன் பஸ் சரியாக இயக்கவில்லை

போக்குவரத்து

வேலூரில் இருந்து கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர் வழியாக ரெட்டிப்பாளையம் கிராமத்துக்கு வழக்கமாக வந்து கொண்டிருந்த தடம் எண்:11 என்ற பஸ் தற்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் சவுகரியத்துக்கு இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு மகளிருக்கு கட்டணமில்லா பயணம் மகளிருக்கு அறிவித்துள்ளது. ரெட்டிப்பாளையம் கிராமத்துக்கு டவுன் பஸ் சரிவர இயக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தண்டபாணி, ரெட்டிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:32 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#33194

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

போளூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் எட்டிவாடி அருகில் பைபாஸ் சாலையில் ஒரு மாதமாக இரவில் மின் விளக்கு எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே அந்த இடம் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி என்று அனைவருக்கும் தெரியும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.-பாண்டியன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:28 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#33193

தடுப்புக்கம்பிகள் அமைக்கப்படுமா?

தடுப்புக்கம்பிகள் அமைக்கப்படுமா?சாலை

வேலூர் அருகே சேனூர் பகுதியில் பாலாற்றுக்கு செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இரு பக்கமும், பாதுகாப்பு தடுப்புக்கம்பிகள் இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள, பாலத்தின் இரு பக்கமும் தடுப்புக்கம்பிகள் அமைக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மார்க்கபந்து, சேனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33192

தடுப்புக்கம்பிகள் சேதம்

தடுப்புக்கம்பிகள் சேதம்சாலை

வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி சாலையில், தர்மராஜா கோவில் அருகில் உள்ள சாலை தடுப்புக்கம்பிகள் சேதம் அடைந்து வளைந்துள்ளன. வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சந்திரசேகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33190

தேவையற்ற பஸ் பயணிகள் நிழற்குடை

தேவையற்ற பஸ் பயணிகள் நிழற்குடைமற்றவை

வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை பகுதியை சிலர் வாகன நிறுத்தமாக மாற்றி விட்டனர். அந்தப் பகுதியை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். தேவையில்லாமல் இருக்கும் பஸ் நிறுத்த நிழற்குடையை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?-மோகன்ராஜ், கொசப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 12:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33188

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் இருந்து பாலாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளம் மாத கணக்கில் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரவில் மோட்டார் சைக்கிளில் வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 5:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33186

சாலை தடுப்பில் துணிகளை உலர்த்தும் அவலம்

சாலை தடுப்பில் துணிகளை உலர்த்தும் அவலம்சாலை

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் எதிரில் உள்ள பைபாஸ் சாலை தடுப்புக்கம்பிகளில் சிலர் துணிகளை உலர்த்துவதற்காக பயன்படுத்துகின்றனர். அதிகமாக காற்று வீசும் நேரத்தில் வாகனங்களில் செல்வோர் மீது துணிகள் பறந்து வந்து விழுந்தால் விபரீதங்கள் ஏற்படக்கூடும். இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.-பாரதிதாசன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33185

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

வேலூர் அருகே சத்துவாச்சாரி மந்தைவெளியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முழுவதும் அவ்வப்போது தெருவில் ஓடுகிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சதீஷ்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 1:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#33050

சாலையில் பெரிய பள்ளம்

சாலை

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் ப.முத்தம்பட்டி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இல்லை. இரவில் வருவோர் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அவலம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை மூட வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick