Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 May 2023 1:27 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33045

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடம் எதிரே கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவில் அப்பகுதியில் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்.-கமலநாதன், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 1:22 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33043

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் கூட்ரோட்டில் சின்ன கவுண்டனூர் பகுதிக்கு செல்லும் சாலையில் பட்டப் பகலில் நேற்று மதியம் தெரு மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் போடப்பட்ட மின் விளக்கு தொடர்ந்து பகல் முழுவதும் எரிந்தது. அடிக்கடி இது போல் நடப்பதால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளருக்கு தகவல் தெரிவித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பகல் நேரத்தில் எரியும் தெரு மின்விளக்ைக அணைக்க வேண்டும்.-வீரமணி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 4:28 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33042

பராமரிப்பில்லாமல் இருக்கும் சிறுவர் பூங்கா

பராமரிப்பில்லாமல் இருக்கும் சிறுவர் பூங்காபூங்கா

பழைய ஜோலார்பேட்டை பாபு நகர் பகுதியில் நகராட்சி சார்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. அது, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கோடைக்கால விடுமுறையில் சிறுவர்கள் விளையாட முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்க வேண்டும்.-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 4:27 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#33040

பகலிலும் எரியும் மின் விளக்கு

பகலிலும் எரியும் மின் விளக்குமின்சாரம்

பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 4-ல் உள்ள ஒரு தெரு மின் விளக்கு பகலிலும் எரிந்துகொண்டுள்ளது. இதனால் மின்சாரம் வீணாகிறது. மின்வாரியத்துறையினர் பகலில் எரியும் மின் விளக்கை அணைத்து விட வேண்டும்.-மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 1:14 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#33039

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் காட்பாடி ஏரி அருகே மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்கு இறைச்சி கழிவுகளும் கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏரி அருகே இதுபோல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலை போல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முன்வர வேண்டும்.-சண்முகசுந்தரம், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 1:11 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#33038

குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல் பலகை

குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல் பலகைமற்றவை

காட்பாடியை அருகே கரசமங்கலம் கூட்ரோடு பகுதியில் சேனூர் செல்லும் சாலையில் இருந்து காட்பாடி 5 கி.மீ. எனப் பழைய அளவு மைல்கல் உள்ளது. இதன் அருகே சமீபத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் 10 கி.மீ. எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தும் இந்தத் தகவல் பலகையை சரியாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கோதண்டராமன், கரசமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 1:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33037

மாநகராட்சி பெயர் பலகை மறைப்பு

மாநகராட்சி பெயர் பலகை மறைப்புமற்றவை

வேலூர் மாநகராட்சி கொணவட்டம் வசந்தம் நகர் பகுதியில் கருகம்புத்தூர் செல்லும் சாலை அருகில் மாநகராட்சி எல்லை தொடக்கம் மற்றும் முடிவை குறிக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது தனியார் கல்வி நிறுவன பெயர் பலகை கட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.-விக்னேஸ்வரன், கொணவட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 1:08 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#33036

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

குடியாத்தம் நகராட்சி 27-வது வார்டு நெல்லூர்பேட்டை சன்னதி தோப்புத்தெருவில் கழிவுநீர் செல்லாமல் கால்வாயில் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவசங்கரி, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33034

கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

போக்குவரத்து

வாலாஜா நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர், சித்தூர், சென்னை, திருத்தணி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் வருகின்றன. அந்த வாகனங்களை கூடுமானவரை வாலாஜா நகருக்குள் வரவிடாமல் பைபாஸ் சாலைகளிலேயே சென்றிட வாலாஜா நகரின் எல்லை நுழைவு பகுதிகளில் போலீசார் நிரந்தரமாக நியமிக்கப்பட்டு தடுத்திட வேண்டும். இதனால் விபத்துகள் வாகன நெரிசல்கள் குறையும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அழகர்சாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 1:00 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#33033

சாலை பழுது

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் தச்சம்பட்டறையில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலை சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாக தினமும் பலர் வேலைக்கு சென்று வருகின்றனர். பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பழுதான சாலையை சீரைமக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எம்.கங்காதரன், புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 4:31 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33032

போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்

போக்குவரத்து

வாலாஜாவில் மக்கள் நடமாட்டமும், வாகனப் ேபாக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் நடக்கின்றன. வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாலாஜா பஸ் நிலைய மையப்பகுதியில் நிழற்குடையுடன் கூடிய வாகனப் போக்குவரத்துப் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.-அப்துல்யூசுப், வலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#33031

பள்ளத்தை மூடுவார்களா?

பள்ளத்தை மூடுவார்களா?சாலை

அரக்கோணம் சுவால்பேட்டையில் பிரதான சாலையான திருத்தணி ரோடு மற்றும் மேற்கு ஒப்பணக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்புத்துறை கேபிள் ஒயர் பதிக்க பள்ளம் எடுக்கப்பட்டு பல வாரங்களாக மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜாமணி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick