Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 May 2023 12:54 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#33030

சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

சாலை

கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியின் சாலைகள் இருபுறமும் தற்போது பெய்த மழையால் செடி, கொடிகள், புல் வளர்ந்துள்ளது. மேலும் கேபிள் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியான முறையில் மூடவில்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களால் இருசக்கர வாகனங்கள், நடைபயிற்சியாளர்கள் ஒதுங்க முடியாமல் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-டி.மன்னர்மன்னன், கொட்டாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 12:53 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#33029

புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவார்களா?

தண்ணீர்

கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் கொசத்தெரு, கம்மாளத்தெரு, கோமுட்டித்தெரு, புதுத்தெரு ஆகியவற்றுக்கு சரியான முறையில் குடிநீர் வருவது இல்லை. எனவே முத்து விநாயகர் கோவில் அல்லது புதுத்தெரு பொதுக்கிணறு அருகில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டினால் அனைத்துத்தெரு மக்களும் பயன்அடைவார்கள். ஊரக வளர்ச்சித்திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவார்களா?-ஆர்.ஜெகன்நாதன், கடலாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 4:23 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#33028

அரசு பஸ்கள் போலீஸ் நிலையம் வழியாக செல்லுமா?

போக்குவரத்து

திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி விட்டால், அந்தப் பஸ்கள் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. எனவே அனைத்து அரசு பஸ்களும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் வழியாக சென்னை செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அருள், சோமாசிபாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 12:46 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#33025

மாடுகள் கட்டும் இடமாக மாறிய குடிநீர் தொட்டி

மாடுகள் கட்டும் இடமாக மாறிய குடிநீர் தொட்டிமற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். அங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மினி குடிநீர் தொட்டிகள் உள்ளன. அதில் ஒருசில மினி குடிநீர் தொட்டிகளை ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் பராமரிக்காததால் மாடு கட்டும் இடமாக மாறி வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அஜித், தலையாம்பள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 6:09 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#33022

செடிகளை அகற்றுவார்களா?

செடிகளை அகற்றுவார்களா?பூங்கா

ஆரணி கோட்டை மைதானத்தில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளது. அங்கு பொதுமக்களுக்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைமேடையைச் சுற்றிலும் விஷ செடிகள் காடுபோல் வளர்ந்துள்ளது. அதில் விஷ உயிரினங்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொள்ேவார் அச்சப்படுகின்றனர். விஷ செடிகளை அகற்ற விளையாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலமுருகன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32918

சாலையில் செல்லும் கழிவுநீர்

சாலையில் செல்லும் கழிவுநீர்சாலை

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் கலெக்டர் இல்லம், பள்ளிகள், வங்கிகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் செல்லும் கழிவுநீர் பிளாஸ்டிக் பொருட்களால் அடைக்கப்பட்டு நிரம்பி சாலையின் நடுவே ஆறாக ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தை சரி செய்ய அங்கு நிற்கும் காவலர்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நகராட்சி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32917

தார் சாலை அமைத்துத்தர வேண்டும்

சாலை

கந்திலி ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி ஏரிக்கரை பகுதியில் இருந்து ஜல்லியூர் வரை செல்லும் சாைல, பெரியகரம் ஊராட்சி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பகுதியில் சேருகிறது. இந்தச் சாலை தற்ேபாது மோசமான நிைலயில் உள்ளது. இந்தப் பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.-கே.சாந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#32915

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் ஏ.கஸ்பா கவரைத்தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#32912

டெங்கு விழிப்புணர்வு தேவை

மற்றவை

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள 29 ஊராட்சிகளில் இதுவரை டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. பொதுமக்களுக்கு குறும்படம் மற்றும் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு இலைச்சாறு ஆகியவை வழங்கவில்லை. கொசு மருந்து அடிக்க வேண்டும்.-கிருஷ்ணமூர்த்தி, காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#32909

தெரு விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ஆற்காடு பிரதான சாலைகளில் ஒன்றாக திகழ்வது எம். ஜி.ஆர்.சாலையாகும். இந்தச் சாலை ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஒரு சாலையாகும். இந்தச் சாலையில் சென்னையில் இருந்து வரும் விரைவுப் பஸ்கள் ஆற்காடு பைபாசில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுச் செல்லும் அந்தப் பயணிகள் எம்.ஜி.ஆர். சாலை வழியாக பஸ் நிலையத்தை வந்து அடைவார்கள். இரவு நேரங்களில் ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆர். சாலையில் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வழியாக வரும் பயணிகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#32907

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுமின்சாரம்

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட துத்திப்பட்டு பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்கு எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுத்து ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக செய்திவெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#32904

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

அன்வர்திகான்பேட்டை ரெயில்நிலையம் அருகே மழைநீர் செல்லும் வடிகால்வாய் பக்கத்தில் நடுரோட்டிலேயே ஜல்லிக்கற்கள், எம்.சான்ட் கொட்டப்பட்டுள்ளது. செங்கற்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு சாலையை ஆக்கிரமித்தும் கடை கட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட இடையூறுகளால் விபத்துகளும் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜா, அன்வர்திகான்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick