Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 May 2023 4:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#33715

வாகன இயக்கத்தை சீர்படுத்த வேண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியப் பகுதியில் கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறையால் அவசர கதியில் முறையாக திட்டமிடாது கட்டமைக்கப்பட்டு கிடக்கும் காந்தி சிலை சர்க்கிள் பகுதியில் அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடக்கின்றன. குறிப்பாக தர்மபுரி சாலையில் வாகனங்கள் சென்று வர என சாலையை பிரித்து அவ்வப்போது காணாமல் போகும் இரும்புத் தடுப்புகளை தவிர்த்து நிலையாக சிமெண்டு கற்களை வைத்து வாகன இயக்கத்தை சீர்படுத்த வேண்டும்.-பொதுமக்கள், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:32 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33714

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலையின் நடுவே மின்கம்பம்மின்சாரம்

ஜோலார்பேட்டை பாபு நகர் அருகே கோவிந்தசாமி தெருவில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவே உள்ளது. அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் வந்து திரும்ப முடியாமல் சிரமமாக உள்ளது. ஒரு சில நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து மின் வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை சற்று ஓரமாக மாற்றி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.-அ.லிங்கேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33713

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுசாலை

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே வேலூர்-கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தரைப்பாலம் குழாய் அமைக்க திடீரென மூடப்பட்டு பணிகள் நிறைவடைந்து சாலை திறக்கப்படவில்லை. இதனால் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் நோக்கி செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் மூடப்பட்ட சாலை திறக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:28 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#33712

குட்டைகளை தூர்வார வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி உமராபாத் பகுதியில் உள்ள குட்டைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குட்டைகளை தூர்வார வேண்டும். -அப்துல்லா பாஷா, சமூக ஆர்வலர், கடம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33711

மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் அவலம்

தண்ணீர்

ராணிப்பேட்டை நகராட்சியில் பல்வேறு இடங்களில் வீடுகளில் உள்ள குழாய் இணைப்புகளில் சிலர் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீர் உறிஞ்சுகிறார்கள். இதனால் தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்க உடனடியாக நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு மின்மோட்டார் மூலம் வீடுகளில் தண்ணீர் உறிஞ்சுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.தன்வந்த் கிருஷ்ணா, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#33708

கால்வாய்களை தூர்வார வேண்டும்

மற்றவை

ஆற்காடு நகரில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய் மண் தேங்கி தூர்ந்துேபாய் கால்வாயில் ஆழம் குறைந்து மழைக்காலங்களில் கழிவு நீர் மழை நீருடன் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. மழைநீர், கழிவுநீர் வடிந்ததும் சாலையில் ஆங்காங்கே சேறும் சகதியுமாக தேங்கி கிடக்கிறது. இனி வரும் காலம் மழைக் காலம் என்பதால் கால்வாய்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மகேந்திரன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33704

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. மேலும் வியாபாரிகளின் வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. வாலாஜா நகராட்சி சார்பில் தினமும் குப்பைகளை அகற்றுவதே இல்லை. வருடத்துக்கு ஒருமுறை மயானக்கொள்ளை விழா வரும்போது தான் பத்திரப்பதிவு அலுவலக முன்பக்கம் நகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்படுகிறது. உடனடியாக வாலாஜா நகராட்சி சார்பில் தினமும் பத்திரப்பதிவு அலுவலக வளாகம் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தம் செய்வார்களா?-நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#33698

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

அரக்கோணம் ஹவுசிங் போர்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்பக்கம் உள்ள சாலையோரம் ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள கட்டிட பகுதியில் புதர் மண்டி உள்ளது. இவைகளை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேந்தர், ஜோதி நகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:14 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33697

பூட்டி வைக்கப்பட்ட கழிவறைகள்

மற்றவை

வாலாஜா தாலுகா அலுவலக வளாகப் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிவறைகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை வளாக கதவுகளை திறந்து விட வேண்டும்.-சுரேஷ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:11 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33696

இருள் சூழ்ந்த நடைமேம்பாலம்

இருள் சூழ்ந்த நடைமேம்பாலம்மற்றவை

வேலூர் அண்ணா சாலையை கடந்து செல்வதற்காக வேலூர் கோட்டை முன்பு மேம்பால நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் பொருத்தப்பட்டுள்ள ஒருசில மின்விளக்குகள் வெகு நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதி என்பதால் இந்த இருள் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியாத மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கமலகண்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33695

கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

கிணறு பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் உள்ள கிணற்றில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மின் மோட்டார்கள் உள்ள இந்தக் கிணற்றை பராமரிப்பு செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:02 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#33693

மின்கம்பத்தில் படர்ந்த செடி

மின்கம்பத்தில் படர்ந்த செடிமற்றவை

பேரணாம்பட்டு பகுதியில் குடியாத்தம்-பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் செடி, கொடியை அகற்ற வேண்டும். -ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick