Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Jun 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#33920

வேகத்தடை அமைப்பார்களா?

சாலை

திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்தச் சாலையில் மார்க்கத்தில் திம்மனாமுத்தூர் ஊருக்கு செல்லும் வழி உள்ளது. அந்த ஊரில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலை இருந்து வருகிறது. எனவே இரு பக்கமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக நவீன வேகத்தடை அமைக்க வேண்டும் இதனால் விபத்து தவிர்க்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#33919

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. ஆனால் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதார வளாகம், குடிநீர் வசதி கிடையாது. மேலும் ரெயில் நிலையத்தில் என்.எல்.சி. சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#33840

சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைப்பார்களா?

சாலை

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் அடிக்கடி வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விரைவில் அப்பகுதியில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:29 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#33839

விற்பனைக்கு வரும் நெல் மூட்டைக்கு லஞ்சம்

மற்றவை

போளூர் தாலுகா புதுப்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வரும் விவசாயிகளிடம் கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதத்தில் சிலர் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-கணேசமூர்த்தி, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:26 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#33837

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

தச்சம்பட்டில் இரவில் போடப்படும் மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிந்த வண்ணம் உள்ளது. மேலும் சில பகுதிகளில் பழுதான நிலையில் எரியாமல் உள்ளன. இதனால் இரவில் சிறு சிறு திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. மின்சாரமும் வீணாகிறது. எனவேபகலில் எரியும் மின் விளக்குகளை அணைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, தச்சம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 2:39 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#33836

வேகத் தடைகளில் பிரதிபளிப்பான்கள் பொருத்துவார்களா?

சாலை

திருவண்ணாமலை ஈசான்யம் எமலிங்கத்தில் இருந்து ஒரு பள்ளிக்கூடம் வரை சாலையில் 2 வேகத் தடைகள் உள்ளன. சாலையோர மர நிழலில் சற்று வேகமாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களுக்கு அந்த வேகத் தடைகள் சரியாக தெரிவது இல்லை. இரவில் வருவோருக்கும் அந்த வேகத் தடைகள் சரியாக தெரியவில்லை. அந்த வேகத்தடைகளில் ஒளிரும் வர்ணம் பூச வேண்டும் அல்லது பிரதிபளிப்பான்கள் பொருத்தி நன்றாக வேகத் தடைகள் தெரியும்படி செய்ய வேண்டும். விபத்துகள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.-என்.சின்னத்துரை,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:22 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#33834

மழைநீர் வடிகால்வாய் வசதி தேவை

மற்றவை

சந்தவாசலை அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தில் மழை பெய்தால் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்யும் நேரத்தில் முதியோர், சிறுவர், சிறுமிகள் வழுக்கி விழும் அவலம் நடந்து வருகிறது. மழைநீர் வடி கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களிடம் பல முறை கூறியும் பலன் இல்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?-மு.மணிகண்டன், நாராயணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33833

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே தோட்டப்பாளையத்துக்கு செல்லும் தெரு ஒன்றில் மூட்டை, மூட்டையாக இளநீர் கூடுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடைக்கின்றன. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலசுப்பிரமணியம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:16 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#33832

பெயர்ந்த ரப்பர்கார்க் வேகத்தடை

பெயர்ந்த ரப்பர்கார்க் வேகத்தடைசாலை

பேரணாம்பட்டு புத்துக்கோவில் பஸ்நிறுத்தம் பெட்ரோல் பங்க் எதிரே சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் ரப்பர் கார்க் வேகத்தடை அமைத்தனர். அதில் நடுவில் ரப்பர் கார்க் ஒன்று ெபயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. பெயர்ந்த இடத்தில் மற்றொரு ரப்பர் கார்க் வேகத்தடை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:11 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33831

கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே சுண்ணாம்புக்காரத்தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் அப்பகுதியில் சீராக செல்வதில்லை. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கால்வாயில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவராமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 1:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#33828

மழைநீர் வடிகால்வாய் மூடி சேதம்

மழைநீர் வடிகால்வாய் மூடி சேதம்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு, அதன் மீது இரும்பு வலைபோல் வைக்கப்பட்டது. அது உடைந்து சேதமாகி உள்ளது. இரவில் அந்த வழியாக செல்லும் பயணிகள் தடுமாறி விழும் அவலம் நடந்து வருகிறது. வடிகால்வாய் மேல் மூடியை சரி செய்வார்களா?-ராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#33716

பகலிலும் எரியும் மின் விளக்குகள்

மின்சாரம்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் நேற்று மதியம், பகலிலும் தெரு மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick