Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#34155

வைபை வசதி தேவை

வைபை வசதி தேவைமற்றவை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட வைபை வசதி கடந்த ஒரு வருடமாக வேலை செய்யவில்லை. வைபை வசதி இல்லாமல் ரெயில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.லிங்கேஷ், கூட்ஸ் செட் ரோடு. இடையம்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34154

பொது சுகாதார வளாக வசதி

மற்றவை

திருப்பத்தூர்-ஆலங்காயம் ரோட்டில் உள்ள நகைக்கடை பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் எங்குமே பொது மக்கள் பயன்படுத்த கூடிய அளவில் சுகாதார வளாகம் இல்லை. பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். எனவே நகைக்கடை பஜாரில் பொது சுகாதார வளாகம் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34153

இருளில் மூழ்கிய ரெயில்வே மேம்பாலம்

சாலை

திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் தாமலேரிமுத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் மேம்பாலம் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுதாகர், தாமலேரிமுத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34106

கோட்டை பூங்காவில் குடிநீர் வசதி தேவை

தண்ணீர்

வேலூர் கோட்டை பூங்காவுக்கு தினமும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள் பொழுதை கழிக்க வருகிறார்கள். அவர்கள் கும்பல் கும்பலாக அமர்ந்து, பேசி மகிழ்கிறார்கள். சிறுவர், சிறுமிகள் விளையாடுகிறார்கள். அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தினமும் மாலை நேரத்தில் குறிப்பிட்ட மணியில் இருந்து இரவு குறிப்பிட்ட மணி வரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வார்களா?-பஷீர், கஸ்பா-வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34105

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

வேலூர் கொணவட்டம் மாங்காய் மண்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் பழ வகைகள் வந்து செல்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்த மாங்காய் மண்டியில் ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சிதறி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் துர்நாற்றமும் வீசிவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-புஷ்பராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:38 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34102

வீணாகும் தண்ணீர்

வீணாகும் தண்ணீர்தண்ணீர்

கே.வி.குப்பத்தை அடுத்த ஐதர்புரத்தில் பள்ளிகொண்டா பாலாற்றுப் பாலம் அருகில் உள்ள குடிநீர் குழாய் பலருக்கும் பயன்படுகிறது. இந்தக் குழாயின் திருகு மூடி சரியாக இல்லாததால் குடிநீர் தொடர்ந்து வீணாக ெவளியேறுகிறது. மாதக் கணக்கில் குடிநீர் ெவளியேறுவதால் அந்த இடம் பாசி பிடித்துள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுக்க மாற்றுக் குழாயைப் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.-கங்கைகொண்டான், ஐதர்புரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34101

ஆபத்தான மின் வழிப்பாதை

ஆபத்தான மின் வழிப்பாதைமின்சாரம்

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கனேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மேல்மாயில் சாலை ஓரம் உள்ள மரத்தின் கிளைகள் நான்கு பக்கங்களிலும் பறந்து விரிந்து காணப்படுகின்றன. அந்த மரக்கிளைகளுக்கு இடைேய ஆபத்தான நிலையில் மின்வழிப்பாைத செல்கிறது. சூைறக்காற்று வீசும்போது மரக்கிளைகளின் உராய்வால் மின்கம்பிகள் அறுந்து ஆபத்து நடக்கும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.-பாலகோபால், ஆலங்கனேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:17 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#34050

அரசு பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

சேத்துப்பட்டு பகுதியில் இருந்து மடம், தேசூர் வழியாக மகமாய் திருமணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கினால் வியாபாரிகள், வயது முதிர்ந்தவர்கள், மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். பொதுமக்களின் கோரிக்கையை அரசு போக்குவரத்துக்கழகம் சேத்துப்பட்டு பணிமனை நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்.-பொதுமக்கள், சேத்துப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 6:07 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#34048

கால்வாய் ஓரம் ஆழ்துளை கிணறு

கால்வாய் ஓரம் ஆழ்துளை கிணறுதண்ணீர்

ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சிறு மின்விசை தொட்டி அருகில் கால்வாயில் ஓடும் கழிவுநீர் ஆழ்துளை கிணற்றில் கலக்கிறது. மின்மோட்டார் மூலம் உறிஞ்சப்படும்போது தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து வரக்கூடிய நிலை உருவாகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வராஜ், அருணகிரிசத்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:53 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#34047

சிமெண்டு சாலைகள் சேதம்

சாலை

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டது. தற்போது அந்தச் சிமெண்டு சாலைகள் பல்வேறு தெருக்களில் குண்டும் குழியுமாகி பழுதடைந்துள்ளது. செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் பழுதடைந்துள்ள சிமெண்டு சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தாமோதரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 6:04 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#34044

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

வந்தவாசியில் 2 பஸ் நிலையங்கள் உள்ளன. எனினும், 2 பஸ் நிலையங்களும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.எல்.ஏ. அலுவலகம், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பழைய பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும். அப்படி இருந்தும் பஸ் நிலைய பகுதி சுகாதார சீர்கேடாக உள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இயற்கை உபாதையை கழிக்கும் இடமாக உள்ளது. குப்பைகள் குவியல் குவியலாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திருவேங்கடம், மேல்பாதி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:39 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34040

மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மாடுகள் நுழைந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. ஆகவே மாடுகள் பத்திரப்பதிவு அலுவலக நுழைவு வாயிலில் வராமல் தடுக்க தரையில் இரும்புக்குழாய்களை பொருத்திட அரசு ஆவண செய்ய வேண்டும்.-நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick