Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37810

டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் மாற்றப்படுமா?

டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் மாற்றப்படுமா?மின்சாரம்

வேலூர் டோல்கேட்டில் இருந்து தொரப்பாடி செல்லும் வழியில் மகளிருக்கான பிற்காப்பு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் அருகில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உடைந்து, சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சங்கர், தொரப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37809

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

கொடிகள் படர்ந்த மின்கம்பம்மின்சாரம்

வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அருங்காட்சியகம் அருகே உள்ள மின்கம்பத்தின் கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் மின்கம்பத்தின் அருகே புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மின்கம்பிகளில் படர்ந்துள்ள கொடியால் மின்வெட்டு, மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தக் கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மயிலை.பாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37804

எரியாத மின் விளக்குகள்

எரியாத மின் விளக்குகள்மின்சாரம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உயர்மின் கோபுர மின்விளக்கு உள்ளது. அந்த மின்விளக்கில் ஒரு விளக்கு மட்டும் எரிகிறது. மற்ற அனைத்தும் எரியாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாகச் செல்லும் பயணிகள் இருளில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#37799

குடிநீர் வசதி செய்வார்களா?

தண்ணீர்

திருவண்ணாமலையில் உள்ள வேங்கிக்காலில் ஊராட்சி அலுவலகத்தில் தினமும் பல்வேறு அலுவல் காரணமாக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் குடிக்க தண்ணீர் வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவார்களா? -என்.சின்னதுரை, வேங்கிக்கால்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#37797

கிடப்பில் போடப்பட்ட உயர்கோபுர மின் விளக்கு பணி

மின்சாரம்

கீழ்பென்னாத்தூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவலூர்பேட்டை சாலை, திரவுபதியம்மன் கோவில் சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு பொருத்த பீடம் அமைத்து 3 மாதங்கள் ஆகிறது. இன்னும் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணியை தொடங்கவில்லை. கிடப்பில் போட்டு விட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணியை தொடங்கி முடிக்க வேண்டும். -எல்.சீனிவாசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#37795

குடிநீர் தொட்டி சேதம்

குடிநீர் தொட்டி சேதம்தண்ணீர்

வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் தூண்கள் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேலே ஏறி தொட்டிைய சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், சமூக ஆர்வலர், புன்னை கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#37792

நிழற்குடை அமைக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை வேங்கிக்கால் வழியாக போளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இந்த வழியில் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்கத்தின் போது அங்கிருந்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் நிற்கின்றனர். மேலும் மழை நேரத்திலும் ஒதுங்க கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். அகற்றப்பட்ட இடத்தில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#37790

சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் அறிவியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் சுற்றுச்சுவர் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. அப்போது சுற்றுச் சுவரில் சில பகுதி உடைந்து விழுந்தது. கால்வாய் அமைக்கப்பட்டு மாதக் கணக்கில் ஆகியும் இன்னும் உடைந்து விழுந்த பகுதியில் சுற்றுச் சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுச் சுவரை சீரமைத்துத் தர வேண்டும். -சின்னா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#37786

வேகத்தடை மீது வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும்

வேகத்தடை மீது வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும்சாலை

காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மாங்கால் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக இரவில் வருவோருக்கு வேகத்தடை இருப்பது தெரியவில்லை. வேகத்தடையை கடக்கும்போது இரு சக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்க வேண்டிய அபாய நிலை உள்ளது. எனவே வேகத்தடையின் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும். -எஸ்.சக்திவேல், வழக்கறிஞர். வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#37784

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுமா?

மற்றவை

செங்கம் பகுதியில் தொடர்ந்து காய்கறி விலை அதிகரித்து ஏறுமுகமாக உள்ளது. தமிழக அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்து வருகிறது. செங்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -வேலுமணி, செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:49 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37536

ரேஷன் கடை பழுது

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதியில் உள்ள மண்டலவாடி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்தக் கடை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை புனரமைத்துத்தர ேவண்டும். -பூக்கடை.சம்பத், புதுஓட்டல் தெரு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#37530

கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் நகரம் முழுவதும் தனியார் நகைக்கடை சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் 36 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.6 லட்சம் நிதி கொடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை நகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு கேமராவை பொருத்தவில்லை. உடனடியாக அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். -டி.வி. பிரேம்குமார், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick