Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Aug 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38403

சாலையோரம் ஆபத்தான பள்ளம்

சாலையோரம் ஆபத்தான பள்ளம்சாலை

வேலூர் அருகே வள்ளலார் நகர் பகுதி 1-ல் உள்ள 46-வது தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சாலை 2 மாதத்துக்குள் பள்ளம் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. சாலை மேலும் பழுதாகாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38399

சேதமான சாலை

சேதமான சாலைசாலை

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டில் இருந்து மாநகராட்சி மண்டல அலுவலகம் செல்லும் சாலை ஸ்மார்ட் சிட்டி பணிகள் மூலம் அமைக்கப்பட்டது. தற்போது சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கந்தசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38396

ஆற்றுப்பாலத்தில் விரிசல்

ஆற்றுப்பாலத்தில் விரிசல்சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள ஒண்ணுபுரம்- அத்திமலைப்பட்டு கிராமங்களுக்கு இடையே நாகநதி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலம் பகுதியில் பெரிய துவாரம் ேபான்று விரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சேதமான மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும். -அசோக்குமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38395

விஷ செடிகள் வளர்ந்த மயான பாதை

விஷ செடிகள் வளர்ந்த மயான பாதைசாலை

ஆரணி புதுக்காமூர் பகுதியில் மயான பாதைக்குச் செல்லக்கூடிய பாதை இருபுறமும் அடர்ந்த காடு போல விஷ செடிகள் வளர்ந்துள்ளன. அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரதாப், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38393

நிறுத்தங்களில் நிற்காத பஸ்கள்

போக்குவரத்து

கண்ணமங்கலம் பகுதி பஸ் நிறுத்தங்களில் காைல, மாலை நேரங்களில் பயணிகள், மாணவ, மாணவிகள் கூட்டமாக நிற்கின்றனர். அவர்களை பார்த்தவுடன் பஸ்சை டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் தொலைவில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கிறார்கள். பயணிகள் வேகமாக ஓடி வந்து ஏறுவதற்குள் பஸ்கள் சென்று விடுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 4:34 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#38388

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

போளூர்-செங்கம் சாலையில் உள்ள நட்சத்திர கோவில் பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை ஆக்கிரமிப்பாலும், போக்குவரத்து நெரிசலாலும் அங்கு வரும் பக்தர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும். -சன்மு, செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#38255

உயர் கோபுர மின் விளக்கு எரியுமா?

மின்சாரம்

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இது கடந்த ஒரு மாதத்துக்குமேல் எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கை எரிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பிரணவ். திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38254

மின் விளக்குகள் அமைப்பார்களா?

மின்சாரம்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் போலீஸ் நிலையம் ரோடு பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளியை நோக்கி செல்லும் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் இதுவரை மின் விளக்குகள் அமைக்காமல் உள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைப்பார்களா? -எஸ்.ராஜசேகர், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38253

புதிய சர்வீஸ் சாலையில் பஸ்கள் செல்ல நடவடிக்கை

போக்குவரத்து

நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அனைத்துப் பஸ்களும் வந்து சென்றன. அதன் பிறகு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படுகின்றன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே கிருஷ்ணகிரி-சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் வெளியூர் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -இல.குருசேவ், பேரூராட்சி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#38250

தண்ணீர் தொட்டி குழாயை சரி செய்ய வேண்டும்

தண்ணீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் தண்ணீர் தொட்டியின் குழாய் உடைந்து தண்ணீர் தெருவில் வீணாக ஓடுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் தண்ணீர் தொட்டி குழாயை சரி செய்ய நடவடிக்கை வேண்டும். -ராஜு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#38249

செயல்படாத அடிபம்பு

செயல்படாத அடிபம்புதண்ணீர்

வாணியம்பாடி சி.எல்.ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதி முன்பு பல மாதங்களாக வேலை செய்யாமல் ஒரு ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. அதை சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறை சீர் செய்ய வேண்டும். -சலீம் பாஷா, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38248

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சாலை

வாலாஜா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு பல ஊர்களில் இருந்து மாணவிகள் ஆயிரக்கணக்கில் வந்து படித்து விட்டு செல்கிறார்கள். தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாலாஜா பஸ் நிலையம் முதல் கல்லூரி வரை மாணவிகள் நடந்து செல்கின்றனர். மாணவிகள் நடந்து செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளால் மாணவிகள் நடந்து செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி, போலீஸ் அதிகாரிகள் முன்வர வேண்டும். -முருகன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick