Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Aug 2023 5:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#38247

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜோதி நகர் வரை பிரதான திருத்தணி நெடுஞ்சாலையில் தினமும் காலையில் இருந்து இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக கடைகள், மருத்துவமனை, இதர பணிகளுக்காக வந்து ெசல்ல சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியோர் போக்குவரத்து நெரிசலால் சிரமப்படுகின்றனர். மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஷோபன்பாபு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#38246

மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்

மற்றவை

சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைக்கு ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையில் விபத்து பிரிவு, மகப்பேறு பிரிவுகளில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கண் சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். அங்குள்ள ஒரு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். கூடுதல் படுக்கை வசதிகளுடன் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#38245

இரவு பணியில் டாக்டர் தேவை

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் டாக்டர்கள் இல்லை. நர்சுகள் முதலுதவி அளித்து, சோளிங்கர் அல்லது வாலாஜா மருத்துவமனைகளுக்கு பரிந்துரை கடிதம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள், புறநோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணிக்கு ஒரு டாக்டரை நியமிக்க வேண்டும். -சுதாகர், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38241

மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜாவில் பல்வேறு சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளிகளுக்கு சிறுவர், சிறுமிகள் செல்லும்போது மாடுகள் முட்ட வருகின்றன. முட்ட வரும் மாடுகளுக்கு பயந்து சிறுவர், சிறுமிகள் ஒதுங்கி ஓடும்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் அவர்கள் அடிபடுகிறார்கள். ெபாதுமக்களுக்கு தொல்லை கொடுத்து, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடிக்க வேண்டும். -விேனாத்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38236

காரிய மண்டபத்தில் நிழற்கூரை வசதி

காரிய மண்டபத்தில் நிழற்கூரை வசதிமற்றவை

ஆரணி புதுக்காமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் எதிரே கமண்டல நாகநதி ஆற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் காரிய மேடையில் மக்கள் காரியங்கள் செய்கிறார்கள். அங்கு, போதிய நிழல்வசதி இல்லை. காரியம் செய்யக்கூடிய பொதுமக்கள் கோவிலின் மேல் தளத்திலேயே அமர்ந்து காரியம் செய்யக்கூடிய அவல நிலை உள்ளது. காரிய மண்டபத்தில் நிழற்கூரை வசதிைய ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சஞ்சய், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38233

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்கா குப்பைகளை உரம் தயாரிக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் கமண்டல நாக நதி ஆற்றிலேயே கொட்டுகிறார்கள். இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. கமண்டல நாக நதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். -பன்னீர்செல்வம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38223

ஊராட்சி கட்டிடம் கட்டும் இடத்தை பரிசீலனை செய்ய வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் வண்ணாங்குளம் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்ததால், புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டிடம் கட்டும் இடம் நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால், சாலை விரிவாக்கம் செய்யும்போது இடிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே வண்ணாங்குளம் ஊராட்சி மன்ற கட்டிடத்தை நடுநிலைப்பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். -கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#38214

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் டவுன் பஸ்சில் காலை ேநரத்தில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளும், இலவச பயணம் செய்யும் பெண்களும் ஏறி செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். போளூர் அரசு போக்குவரத்துக் கழகம் மாணவ-மாணவிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர ேவண்டும். இல்லைெயனில் கூடுதல் பஸ் இயக்க ேவண்டும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -யுவராஜ், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#38210

எச்சரிக்கை பலகை வைப்பார்களா?

எச்சரிக்கை பலகை வைப்பார்களா?சாலை

விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நாடழகானந்தல் கூட்ரோடு, தலவாகுளம் கூட்ரோடு பகுதிகளில் தடுப்புச்சுவர் இருப்பதற்கான எந்த எச்சரிக்கை பலகையும் இல்லை. இரவில் வரும் வாகனங்கள் அடிக்கடி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுப்புச்சுவர் இருப்பதை குறிக்க எச்சரிக்கை பலகை ைவக்க வேண்டும் அல்லது ஒளிரும் பிரதிபளிப்பான்கள் அமைக்க வேண்டும். -ராஜா, நாடழகானந்தல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 6:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38139

குழாய் உடைப்பால் சேறும் சகதியுமான சாலை

குழாய் உடைப்பால் சேறும் சகதியுமான சாலைசாலை

வேலூர் சத்துவாச்சாரி தண்டு மாரியம்மன் கோவில் அருகே சாலை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆறு போல் தண்ணீர் ஓடியதால் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கல்யாணசுந்தரம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 1:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38137

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

கொடிகள் படர்ந்த மின்கம்பம்மின்சாரம்

வேலூரை அடுத்த செங்காநத்தத்தில் அரசமர விநாயகர் கோவில் அருகே சாலையோரம் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தைச் சுற்றி செடி, கொடிகள் வளா்ந்து புதர் மண்டி உள்ளது. மேலும் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளன. எனவே மின் வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தைச் சுற்றி உள்ள கொடிகள், புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 1:05 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#38135

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் சுற்றுச்சுவர் ஓரம் உள்ள கால்வாயில் பல மாதங்களாகக் கழிவுநீர் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகில் உள்ள சிறுபாலத்தின் சுவர் ஊறி போய் அதிலேயே விழுந்துவிட்டது. சாலை ஓரமாக ஒதுங்குவோருக்கு இது மரண பள்ளமாகி விட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை தேவை. -ப.ராமன், எம்.ஜி.ஆர்.நகர், குடியாத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick